ஏ ஆட்டோ !! … “புதுசு கண்ணா புதுசு” !!

For My English Readers :
Please be aware of these “hand tricks” while handling cash. This might have happened here in India, but it could happen anywhere where con is on.
இப்பெல்லாம் வீட்டிலே கார், அல்லது குறைஞ்சபட்சம் ஸ்கூட்டியாவது இருக்கும்ன்னு சந்தேகமே இல்லாம சொல்ல்லாம்… பஸ்ஸிலே நெரிசல் பட்டு போறவங்ககூட “இந்த வருஷமாவது ஒரு ஸ்கூட்டி வாங்க காசு சேத்துடணும்” ன்னு தான் போராடறாங்க… (..பதிவு பொருளாதாரம் பத்தி இல்லைங்கோ !!)
ஆனாலும் ஒரு ஆத்திர அவசரத்துக்கு “ஏ ! ஆட்டோ !!” ன்னு தான் கையை காட்டுவோம். அதுவும் நாம போகிர இடம் முக்கியமா பார்க்கிங் கிடைக்காத இடமா இருந்தா… “ஆட்டோவிலே போயிடலாம்ன்னு” தான் தோணும். தப்பில்லை, இப்போ இருக்கிர ட்ராபிக் நெரிசல்லே நினைச்ச இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு போய்ச்சேர முடியறதில்லை (..அப்படியே அவசரப்பட்டாலும் “போய்ச்சேர வேண்டிய” அபாயம் தான் கண்முன்னாடி வரும்) இதெல்லாம் பார்க்கும் போது ஆட்டோவே தேவலைன்னு தோணும்…. ஏன் ! பஸ்ஸிலே போக்க்கூடாதா??? ன்னு கேக்கலாம்…. போலாமே ! போலாமே ! அந்த சந்தர்பத்திலே போகலாம்ன்னா போகலாம்…..
ரெண்டு நாள் முன்னாடி பழைய பேப்பர் / பத்திரிகையெல்லாம் எடைக்குபோடலாம்ன்னு அடுக்கிகிட்டிருந்தப்போ ஒரு “ஆட்டோ” செய்தி கண்ணுக்கு தென்பட்டது… எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க … ரூம் போட்டு யோசிப்பாங்களோ !! ன்னு சொல்லவச்சது.
விஷயம் இதுதாங்க:

ஆட்டோ மீட்டர் சரியில்லை / ஆட்டோ ட்ரைவர் சொன்னது தான் ரேட் / நாம சொல்லற இடத்து வராம லந்து பண்ண்றதுன்னு … பொதுவாவே ஆட்டோக்கரங்க மேல எக்கசக்க புகார் இருக்கு. ஆனா, இது “புதுசு கண்ணா புதுசு”

பெங்களூர்லே இருக்கும் ஒருத்தர், ராத்தி 10 மணிக்கு மனைவியுடன் ஆட்டோலே போயிருக்கார். கிராக்கி ஏத்தும்போது மீட்டருக்கு மேலே 1.5 குடுங்க ன்னு நல்ல புள்ளையா சொல்லி, கொஞ்ச தூரம் போனதும் மீட்டர் ரிப்பேர் 300 /- ரூவா வேணும்ன்னு சொல்லியிருக்கார். இவரும் போனாப்போகுது ன்னு சரி ன்னு சோல்லியிருக்கார்.(….10 மணிக்கு மேலே இனொரு ஆட்டோவை தேடணும்.. மனைவி கூட இருக்காங்க… எதுக்கு ரிஸ்க்..)

வீட்டுக்கு வந்ததும் பர்ஸிலிருந்து 3 நூறு ரூவா நோட்டெடுத்து குடுத்திருக்கார். இந்தப்பக்கம் கண் சிமிட்டும் நேரத்துக்குள்ளே ஆட்டோக்காரர் “…சார் ! நீங்க 2 நூறு நோட்டும் 1 பத்து ரூபா நோட்டும் குடுத்திருக்கீங்க…. ” இருட்டிலே இவர் கண்ப்யூஸாயிட்ட மாதிரி சொல்லியிருக்கார். நம்மாளு என்னடானா “என் பர்ஸிலே 10 ரூபா வே அன்னைக்கு இருக்கலை, 3 நூறு ரூவா தான் இந்ததுன்னு” கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா சொல்லரார்… இல்லை… புலம்பறார்…..

பிக்-பாகெட் அடிக்கறவங்க; கூட்டத்திலே செயின் திருடறவங்க நம்ம உடம்பிலே கைவச்சாலே நமக்கு சரியா சொல்லமுடியறதில்லை… அவ்வளவு லாவகமா இருக்காங்க. They have such nimble fingers. அப்படி இருக்கும்போது, அரைகுறை வெளிச்சத்திலே ( கிட்டத்தட்ட 10:30 – 11:00 pm… நம்ம ஊரு Street light பத்தி சொல்லவே வேண்டாம்..) இதே லாவகத்தோட, நூறு ரூபா நோட்டை மாத்தி 10 ரூபா நோட்டை வைக்க சில வினாடிகளே போதுமானது.
ஆட்டோ ட்ரைவர்கள் எல்லாரையும் மொத்தமா குற்றம் சொல்ல்லை. இது மாதிரி சிலபேரால.. நல்லவங்களைக்கூட சந்தேகக்கண்ணோட பார்க்கவேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்ன்னு சொல்லறேன்.
இந்த செய்தியை படிச்சதுக்கப்புறம், ஆட்டோவிலே போறபோதெல்லாம், ட்ரைவர் விவரங்கள் எழுதியிருக்குமே… Auto Driving License Display System (பெயர் – விலாசம் – லைசென்ஸ் எண் – ஆட்டோ எண் — இதோ இது மாதிரி) அதை மொபைல் போண்லே படம் எடுத்து வச்சுக்குவேன்…..சில நாட்களுக்கப்புறம் அழிச்சிருவேன்… இன்னாள் வரை எனக்கு கிடைச்சஆட்டோ-ட்ரைவர்கள் பொதுவாவே நல்லவங்களாத்தான் இருக்காங்க…(ட்ரைவர் சார்! நீங்க இதை படிக்கறீங்கன்னா.. இந்த மாதிரி ஆசாமிங்க உங்க எல்லாருடைய பெயரையும் கெடுக்கறாங்க)… ஆனாலும் இந்த செய்தி படிச்சதுக்கப்புரம் ஒரு வித paranoia ….

இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை

இதயம்”, வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholesterol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, “இதயம் வெடித்து விடும்போல உள்ளதே” என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் “பத்திரமாக” இருக்க வேண்டிய இதயம், “உடலுக்கு வெளியே” உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம், பீகாரில், அரசாங்க மருத்துவமனையில், கூலி வேலை செய்யும் மாஜி-விபா தம்பதிக்கு, ஓர் அழகான ஆண் குழந்தை 26 Aug 09 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே (நெஞ்சுக்கு மேலே) இருந்தது . தட்டச்சு பிழை எதுவும் இல்லை, நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது.
இந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis – தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.
ஆனால், இந்த பீகார் – பாப்பாவுக்கு ஆயுள் கெட்டி. (இந்தப் பாப்பாவுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை). ஏதோ ஒரு குக்கிராமத்தில், அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் மருத்துவமனையில் பிறந்த இந்தச் சிசுவை அங்கே சிகிச்சை செய்ய முடியாது என்பதால், தில்லிக்குக் கொண்டு செல்லச் சொல்லிவிட்டார்கள். இயற்கையாகவே இந்தப் பாப்பாவின் இதயத்திற்குப் பாதுகாப்பு இல்லை (நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே அல்லவா இதயம் இருக்கிறது). சாதாரணத் துண்டின் பலத்தை நம்பி, 3 நாள் குழந்தையை சுற்றிக்கொண்டு, ரயிலில் unreserved compartment ல் தில்லியில் உள்ள AIIMS (All India Institute of Medical Science) க்கு வந்தார்கள்.
குழந்தையை பார்த்த AIIMS மருத்துவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. உடனே குழந்தையை isolation ward இல் வைத்து கண்காணிக்கத் தொடங்கினார்கள். மற்றப் பிள்ளைகளை விட இந்தக் குழந்தைக்கு infection வரும் சாத்தியம் அதிகம். X- Ray எடுத்துப் பார்த்ததில், இந்தப் பாப்பாவின் நெஞ்சுக்கூட்டில் இதயத்துக்கான இடமே இல்லை என்று காண்பித்தது. இதற்கு ஒரே வழி, அறுவைச் சிகிச்சை மூலம் நெஞ்சுக்கூட்டில் (இதயத்தின் இடத்தை ஆக்கிரமத்திருக்கும்) உறுப்புகளை ஒதுக்கி, இதயத்துக்கென தனி இடத்தை அமைக்கவேண்டும். பிற்பாடு, வெளியே தொங்கும் இதயத்தை இந்த இடத்தில் பொருத்த வேண்டும். இப்படிப் செய்யும் பொழுது மற்றத் தசைகளுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அழுத்தமும், பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யவேண்டும்.
இவை அனைத்தும் பிறந்து 10 நாட்களே ஆன – சில அங்குலங்கள் மட்டுமே வளர்ந்த குழந்தையின் உடலில் செய்யவேண்டும். பிள்ளையார் சுழியிலிருந்து – சுபம் வரை ஒரே சிக்கல்.
ஆனாலும் மனம் தளராமல், கைதேர்ந்த 13 மருத்துவர்கள் 4 மணி நேரம் இந்தக் குழந்தையின் ஒவ்வோர் அசைவயும் கண்காணித்து 5 Spet 09 இல் வெற்றிகரமாய் இந்த அறுவைச் சிகிச்சையை நடத்தினார்கள். இந்த சீக்குப்பிள்ளையை ரயிலின் unresrved compartment இல் எந்த வித ‘பாதுகாப்பும்’ இல்லாமல் கொண்டுவந்ததால், வயிற்றுப்போக்கும், infection உம் இருந்ததாம். அதனால், ரத்தம் மாற்று சிகிச்சையும் Blood Transfusion கூடவே நடைபெற்றது. இப்பொழுது பீகார்-பாப்பாவின் உடல் நிலையில் அறுவை சிகிச்சையின் வீரியம் குறைந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
திரு.பிஸ்வோய் & திரு. தேகா வின் குழு இக்குழந்தையைத் தவறாமல் கண்காணித்து வருகிறார்கள். சில மணி நேரங்கள் மட்டுமே வாழ வகைசெய்யும் இக்குறைபாட்டுடன், இந்த பிள்ளை 10 நாட்கள் வாழ்ந்தது முதல் அதிசயம் என்றும், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் தெரிவது இரண்டாவது அதிசயம் என்றும் கூறுகிறார்கள். பீகாரிலிருந்து தில்லி வருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த கிராமத்து மருத்துவரை மாஜியும் விபாவும் நன்றியுடன் நினைவுகூறுகிறார்கள்.
சாதாரண கூலி வேலை செய்யும் இந்தத் தம்பதிக்கு பீகாரிலிருந்து ரயில் ஏறும் பொழுது தெரியாது, இந்தப் பிள்ளை பிழைக்குமா பிழைக்காதா என்று. தக்க நேரத்தில் ஊக்கமும் பண உதவியும் செய்த கிராமத்து மருத்துவரும், மருத்துவ உதவிகளைச் செய்து வரும் AIIMS குழுவின் கூட்டு முயற்சியாலும், பீகார்-பாப்பா பிழைத்துத் தேறி வருகிறது. எல்லோரும் இந்தக் குழந்தையை அதிசயபாப்பா என்று சொல்கிறார்கள்.

புத்தகத்தைப் படிப்பது மட்டும்தான் கல்வியா ?

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது போல், புத்தகங்களை படித்ததால் மட்டுமே ஒருவர் அறிவாளி ஆகிவிடமுடியாது. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படித்ததால் மட்டும் ” கல்வி ” பெற்று விட முடியாது. ” I have never let my schooling interfere with my education.” என்று Mark Twain சொன்னது எவ்வளவு பேருக்கு தெரியும். அப்படியே தெரிந்தாலும் நினைவில் வைத்திருப்பார்களா?. அனுபவங்களை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் சரி பார்க்கும் பட்டியல்)Check list) தான் படிப்பு. குறிப்பிட்ட அனுபவத்தின் முடிவில் மனதில் எழும் கேள்விகளும், அதற்காக பதிலை தேடும் முயற்சியும் தான் நிரந்தமான கல்வி என்பது என் கருத்து.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் “Practical Class” என்றொரு வகுப்பு உண்டு. அதாவது புத்தகத்தில் படித்ததை நடைமுறையில் செயல்படுத்தி பார்ப்பது. உதா: ஒளி்க்கதிர்கள் நேர்க்கொட்டில் செல்கிறது என்று படித்தால் மட்டும் புரிந்துவிடுமா? .. திரைச் சீலைகள் மூடிய அறையில் Torch அடித்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்குமே! காலப்போக்கில் இந்த “Practical Classes” நடைமுறை கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக ஏட்டுச்சுரைக்காயாய் மாறிப்போனது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக சண்டிகர் நகரத்தில் உள்ள “விவேக் மேல் நிலைப் பள்ளியில்” நடைமுறைக் கல்வியைச் சீராக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு 11 ஆம் வகுப்பைச் சார்ந்த சில மாணவர்களை ஒருங்கிணைத்து 8,000 ரூ. முதலீட்டில் InsPirated என்ற நிறுவனத்தை October 2008 இல் தொடங்கினார்கள். வர்த்தக துறையை (Commerce Dept) சேர்ந்த ஆசிரியர்கள் நிறுவனத்தை எப்படி நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகளையும் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் உள்ளது போல், இங்கும் நிர்வாகிகள் குழு (Board Of Directors), பணியாளர்கள் (Staff Members), கண்காணிப்பாளர் (Supervisor), மேற்பார்வையாளர் (Administrator), பொருளாளர் (Finance manager) என்று எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தை நடத்த தேவையான வேலையாட்களை பள்ளியில் படிக்கும் சக மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்தார்கள். இவர்களுக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட்டது உதா: 1-கிலோ குடமிளகாய் நறுக்க 2ரூ. உணவுப்பொருட்கள் தயாரிப்பது, புத்தங்களுக்கு அட்டை போடுவது (Book Binding), காகிதங்களைப் பயன்படுத்திப் பொருட்களை தயாரிப்பது (Paper products), Chalk தயாரிப்பது என்று பல வேலைகளை செய்தார்கள். பள்ளியில் வகுப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இவர்கள் வந்து “நிறுவனத்தின் வேலைகளை” கவனிப்பார்கள். அதே மாதிரி மாலையில் வகுப்பு முடிந்த பிறகு “நிறுவனத்தின் வேலைகளை” செய்வார்கள். இந்த கூட்டு முயற்சியின் பலனாக பலனாக லாபம் 11 மடங்கு அதிகரித்தாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றன.
இந்த பள்ளிக்கூடத்தில் நடைமுறை கல்வித்திட்டத்தின் கீழ் இம்மாதிரி மாணவர்களால் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. எல்லாமே கார்ப்பரேட் உலகை பிரதிபலிக்கும் விதம், பங்குதார்கள் (Shareholders), பங்காதாயம் (Dividend), சம்பளம் (Salary), ஒப்பந்த்ததில் வேலை செய்பவர்கள் (Contractors), லாப – நஷ்ட கணக்கு (Profit & Loss Accounts), சரக்குகளின் விவரங்கள் (Inventory), விலை விவரங்கள் (Invoice), செயல்பாட்டு அறிக்கை (Performance Reports) என்று எல்லாமே உண்டு. இது இவர்களுக்கு Hands–on–Experience ஐ தருகிறது. சரி, இப்படி மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனங்கள், இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் போழுது என்ன ஆகும்? நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் பணம் யாருக்கு – எப்படி சேரும்?.
குறிப்பிட்ட நிறுவனத்தை ஆரம்பிக்க முன்வரும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவில் (Board Of Directors) இடம் பெறுகிரார்கள். இந்நிறுவனத்தின் பங்குகளை 10ரூ என்ற விலைக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு / அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்கப்படுகிறது. உண்மையான பங்குச்சந்தையில் பங்குகளை allot செய்வதுபோல் தான் இதுவும். நிர்வாகிகள் குழுவில் இருக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வருடம், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு.. அதாவது liquidate செய்து, பணத்தை பங்குதார்களுக்கு முறையே கொடுத்துவிடுவார்கள். இதை பள்ளி கட்டாயப்படுத்துவதில்லை. இம்மாதிரி நிறுவனத்தை ஆரம்பிப்பதும், அதில் பங்குகொள்வதும், பங்குதார் ஆவதும்.. அவரவர் விருப்பம்.
இந்த திட்டத்தை கடந்த 13 வருடங்களாக விவேக் மேல் நிலைப் பள்ளி செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் HSBC மற்றும் KPMG போன்ற நிறுவங்களுக்கு சென்று presenstation கொடுத்துள்ளார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த JA-India (Junior Achievement India) வின் கீழ் அரசு அனுமதி பெற்றுள்ளது.
நம் தாத்தா – பாட்டி காலத்தில் 5 வது வரை படித்திருந்தால் போதுமானது. இங்கே சொல்லி, அங்கே சொல்லி எப்படியோ வேலை கிடைத்துவிடும். அப்பொழுதெல்லாம் “மெட்ரிக் பாஸ்” , அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே அறிவாளி என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நிலவும் காலத்தில் எவ்வளவு படித்தாலும் போதாது. Freshers களிடம் கொஞ்சமும் தயவு இல்லாமல் “அனுபவம் உண்டா” என்று நிர்வாகம் கேட்கிறது.
பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் இந்த JA-India ( Junior Achievement India ) திட்டத்தின் கீழ் .. அவரவர் நாட்டில் எப்படியோ அப்படி .. இம்மாதிரி செயல்களை மேற்கொண்டால், புத்தங்களில் மட்டும் படிப்பை பார்க்காமல், கல்வியின் அனுபவத்தை நன்றே அறிந்துகொள்ளலாமே.

Billion Beats ல் என் கவிதை

ன்னுடைய முந்தைய பதிவில் Dr. Kalam நடத்தும் Billion Beats ங்கிர பத்திரிக்கை குறித்து சொன்னேனில்லையா…. அந்த பதிவெழுதும் போது இருந்த சந்தோஷம் இப்போ எனக்கு ரெண்டு மடங்காயிடுச்சு.. இருக்காதா பின்னே.. நான் எழுதின கவிதை ஒண்ணு அதிலே பிரசுரமாயிருக்கு

A nation of billion brilliance,
Beats in unison for a want. ….
…………….Complete poem at Billion Beats

English Poetry லே உங்களுக்கு நாட்டம் இருந்தா 29 Nov 2007 billionbeats Issue 2 ஐ டவுண்லோட் பண்ணி படிக்கலாம்
கலாம் அவருடைய கணக்கு டீச்சரை பத்தி எழுதியிருக்கார்… அப்படியே நம்ம கிட்ட பேசரா மாதிரியே இருக்கு, தொலைனோக்கு பார்வையுடன் 10 வது படிக்கும் குட்டியின் கட்டுரை அருமை… இன்னும் நிறைய இருக்கு.. படிச்சு பாருங்க.. truly inspirational

ATM லே காசு எடுத்தா வங்கிக்கு service fee கட்டணும்

ப்பெல்லாம் வங்கிக்கு யரும் காசு எடுக்க போகரதே இல்லை… அதுக்கு தான் ATM இருக்கே… (ATM == Any Time Money ன்னு அப்பா இருக்கார்னெல்லாம் சொலக்கூடாது… இது ஒரு ஸீரியஸ் பதிவு..நிலமையை பார்த்தீங்களா.. இதெல்லாம் சொல்லவேண்டியதா இருக்கு..),,ஹ்ம்..ஹ்ம்… சும்மா கார்டை போட்டோமா.. காசை எடுத்தோமா… ( தெவைப்பட்டா.. mini statement கூட எடுத்து வச்சுக்கலாம்).. அப்புறம் எப்பவாவது நேரம் இருக்கும்போது வங்கிக்கு போய் பாஸ்புக்கை அப்டேட் பண்ணிக்கலாம்… அது கூட வெறும் ஒரு ஆதாரத்துக்கு தான்.. ஏன்னா நம்ம வங்கி கணக்கு வழக்கை internet banking மூலம் இணையதளத்திலேயே பார்த்துகொள்ளலாம்

ஒரு விதத்திலே ATM வசதியும் கூட.. மொத்த்மா ஒரு பெரிய துகையை வீட்டிலெ வச்சுக்கிரது ஒண்ணும் புத்திசாலித்தனம் இல்லை… அப்பபோ தேவைக்கு ஏத்தா மாதிரி withdraw பண்ணுவதே சரின்னு என்னுடைய கருத்து. இப்படி ATM மும் நானும் 3-4 முறை ஒரு மாசத்திலே சந்திச்சுக்குவோம்.. பின்னே.. பால்-பேப்பர் – மளிகை- ஸ்கூல் பீஸ்– அல்லறை சில்லறை செலவு .. ன்னு என்னெல்லாம் இருக்கு… இத்த்னை இருக்க ரெண்டு நாள் முன்னே படிச்ச சேதி.. என்னை கதிகலங்க வச்சது.. சேதி என்னனா.. இனிமேல் (தனியார் வங்கியில்) ATM லிருந்து காசு எடுத்தா.. வங்கிக்கு நாம service fee ங்கிர முறையிலே பணம் கட்டணும்

என்னடா இதுன்னு மனசுக்குள்ளே ஒரு பீதி..சரி.. இது தனியார் வங்கியிலே மட்டும் தான்னு தலைப்பை பார்த்து நினைச்சேன்.. சேதியை மேலும் படிக்கும் போது… ஒருவேளை State bank Groups ல் இருக்கும் வங்கிகளுக்கும் இதுமாதிரி ஏதாவது service fee இருக்குமோன்னு ஒரு சந்தேகம் கிளம்பிச்சு.. அதுக்கு காரனம்.. நான் சிகப்பு கலர்லே கோடுபோட்டிருக்கேனே… அந்த statement தான் காரணம்
சந்தேகம் வந்து கூகிள்லே தேடிநதிலெ.. இந்த செய்தியை CNN.IBN மற்றும் NewIndPress லெயும் உறுதி படுத்திட்டாங்க.

அடுத்த கட்ட நடவடிக்கையா.. நான் நடையை கட்டினேன்.. எங்கே… அட வங்கிக்குதான்… என்ன ஆனாலும் இதை அவங்க கிட்டே கேட்டு சந்தேகத்தை நிவிர்த்தி செஞ்சுக்கலாம்ன்னு தான்.. பேசி பார்த்ததிலே சில திடுக்கிடும் உணமைகள் தெரிய வந்தது… கவனமா படிங்க… இதெல்லாம் நீங்க கேட்டாதான் சொல்லுவாங்க… இல்லைன்னா… உங்க அக்கவுண்டிலிருந்து கம்முன்னு service fee ஐ அவங்களே எடுத்து… பாஸ்புக்கிலே entry யும் போட்டுகுடுப்பாங்க.

நான் அறிந்த தகவல் – state bank Group ல் இருக்கும் வங்கிகளுக்கு

  1. ATM ல் ஒரு நாள் நீங்கள் 15,000/- மட்டுமே எடுக்க முடியும்.. (இதுக்கும் அதிமா எடுக்க முயர்ச்சி பண்னினீங்கன்னா…ATM ..”தரமுடியாது.. பேமானி.. போயிட்டு நாளைக்கு வா”…ன்னு சொல்லும்.
  2. 6 மாசத்துக்கு 50 ATM transactions செய்ய தான் நமக்கு அனுமதி உண்டு. ( ஒரு வேளை நீங்க இந்த 50 Transactions ஐ 2 மாசத்திலே நடத்திட்டீங்கன்னா…).. 51st transaction லிருந்து 50 /- ருபா Service fee / Transaction fee ன்னு நாம வங்கிக்கு கட்டணும்
  3. உங்களது ATM கார்ட் ஏதாவது State Bank Group of banks ( SBI, SBT,SBM, SBS… ) ஐ சேர்ந்ததா இருந்தா…நீங்கள் வேறு ஒரு state bank Group ஐ சேர்ந்த வங்கியின் ATM ல் எந்த விதமான extra charges இல்லாமல் பணம் எடுக்கலாம்…..

    உதா:— உங்க கிட்டே SBM ன் ATM கார்ட் இருக்கு.. ஆனா .. உங்க வீட்டுப்பக்கத்திலே SBI ன் ATM தான் இருக்கு… இப்படி இருக்கும் பக்ஷத்தில் நிங்கள் தாராளமாக ATM லிருந்து காசு எடுக்கலாம்…. at no extra costs…. ஆனால்…..

    .

  4. கீழே எழுதியிருக்கும் வங்கிகளின் ATM ல் நீங்கள் உங்கள் கார்டை உபயோகித்தூ பணம் எடுத்தால்… ஒவ்வொரு transaction க்கும் Rs. 25 + 12.24% service t
    ax ன்னு கட்டணும்… இது மட்டுமமில்லை…. balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டு

    HDFC
    UTI
    Punjab National Bank
    Andhra Bank
    Indian Bank
    Dena Bank
    Co-operative Banks
    Uco Bank
    Bank of India

  5. நீங்க state bank groups ன் ATM லேயும் எடுக்காம… மேலே பட்டியலில்லருக்கும் வங்கியிலும் எடுக்காம… வேறே வங்கிகளின் ATM ல் காசு எடுத்தால் ஒவ்வொரு transaction க்கும் Rs. 50 + 12.24% service tax ன்னு கட்டணும்…… balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டு

அதனால மக்கஸ்.. உடனே உங்க வங்கியுடன் தொடர்பு கொண்டு .. அவங்க விதிமுறை என்னன்னு கேட்டு தெரிஞ்சு செயல்படுங்க… அனாவசியமா வங்கி வெப்சைட்லே விவரம் தேடறேன் பேர்வழின்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. வங்கியிலே நேரடியா போய் கேட்டாலும்… “”” இப்போ இதெல்லாம் உங்களுக்கு விலாவரியா (!!!) விளக்க எங்களுக்கு நேரமில்லை… மத்த்யானதுக்கு மேலே வாங்க..”””… ன்னு தான் சொல்லுவாங்க… ஸோ… உங்க ATM withdrawal slip க்கு பின்னாடி இருக்கும்(24x 7) helpline நம்பருக்கு போண்போட்டு விவரங்கள் கேளுங்க…கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு… சும்மா தூக்கி குடுக்க மனசு வருமா என்ன ? ? ?

cell-phone சிக்னல் கிடைக்கலை..இவங்க உயிரக்கும் சேதமில்லை

ஹைதிராபாத் குண்டுவெடிப்புக்கு காரணம்மாக இருந்த குண்டு cell-phone கொண்டு வெடிக்கசெய்ததுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். உயிர்பலி வாங்கிய இந்த (முதல்) குண்டு வெறும் ஒரு திசை-திருப்பி தான்னு கேட்டப்போ ஆடிப்போயிட்டேன்..அதாவது..முதல் குண்டு வெடித்தப்புறம் நிலமைய்யை சமாளிக்க வரும் அரசியல்வாதிகளை குறிவைத்து இன்னும் 2 குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாம்

இது எல்லாமே Cell-phone activted explosive device. அதாவது.. Bombஐ cell-phone க்கு ஜாயின் பண்ணியிருக்கும். சம்பந்தபட்ட cellphone-number க்கு அந்த ஆசாமி ( படுபாவி) call பண்ணுவான். அப்பொ…ஏதோ ஒரு அப்பாவி..””என்னடா..யாரோ cellphone ஐ மறந்துட்டாங்க.. ஒருவேளை அவர் தான் call பண்றாரோன்னு call ஐ accept””… செய்வான்… இங்கே தான் இருக்கு வினை…. எதிர் முனையிலிருந்து…”ஹலோ..”க்கு பதிலா…டமார்…ன்னு மத்தவங்களுக்கு ஒரு சவுண்டு கேக்கும் ….. phone ஐ எடுத்த அப்பாவிக்கு என்ன நடந்ததுன்னு தெரியரவே தெரியாது..

முதல் குண்டுவெடிப்பு ஒரு திசை-திருப்பி தான். அரசியல்வாதிகளும், மற்ற VIP ம் வரும்போது 2nd 3rd குண்டை இதேமாதிரி சம்பந்தபட்ட cellphone-number க்கு call பண்ணி activate பண்ணுவதாக இருந்திருக்கலாம்..பாழாப்போன (cell phone connection company..நீ வாழ்க) சிக்னல் கிடைக்காத்தால…2nd 3rd குண்டுகள்க்கு வச்சிருந்த cell-phone க்கு ring போகலை…அத்னால.. யாரும் call ஐ attend பண்ணலை…So.. குண்டு வெடிக்கலை..எல்லாரும் தப்பிச்சுட்டாங்க…படத்தை க்ளிக்கி பெரிதாக்கி மேட்டரை கண்டிப்பா படிங்க

ஒருவழியா சிக்னல் கிடைச்சு call வருவதுக்கு முன்னே… நம்ம bomb squad ரொம்ப விரைவாக செயல்பட்டு bomb ஐ செயலிழக்க செய்துட்டாங்க.

இனிமே அனாமத்தா போன-கீன் கிடந்தா… call attend பண்ணரதுக்கு முன்னாடி..அதிலேயிருந்து ஏதாவது வயர்-கியர் எட்டிப்பாக்குதான்னு பார்த்துட்டு போனை எடுங்க..ஏன்னா உண்மையிலேயே.. யாரவது போனை மறந்து போயிருக்கலாமில்லையா..? ? ?

Hyderabad ல் குண்டு வெடிப்பு..

ஆண்டவா… இது என்ன கொடுமை…முன்னே Akshardham…இப்போ மெக்கா-மசூதியா.. வெள்ளிகிழமை தொழுகை பண்ணும் போது இந்த சம்பவம் நடந்திருக்கு…நிம்மதியா சாமி கும்பிட கூட இனிமே போகமுடியாதா.. (சாமி – இல்லைன்னு சொல்லரவங்க.. ப்ளீஸ்.. இது சர்ச்சைக்குரிய நேரமில்லை..).. உங்களுக்கு தெரிஞ்சவங்க ஹைதிராபாத் லெ இருக்காங்கன்னா… உடனே விசாரீங்க…எல்லாம் நல்லதா இருக்க பிரார்த்திக்கறேன்

bangalore & maharashtra லே haigh alert
பேசிகிட்டு இருக்க நேரமில்லை… இந்த பதிவு வெறும் ஒரு தகவல் தான்

ஆத்தா…. நான் பாஸாயிட்டேன்……..:o3

ந்த டையலாகை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா… (அதானே..மனைவியோட பிறந்தநாளை ஞ்யாபகமா மறந்துடுவீங்க >:).பிள்ளைகள் ஸ்கூல் Annual-day Function./ வெட்டிங்க்-டே. இதெல்லாம் மறந்துடுவீங்க….. சினிமா டையலாக் எல்லாம் மறக்குமா என்ன..:-w.)..உங்க யூகம் ரொம்ப செரி.. சத்தியராஜ் சொன்னது தான்..

ஏதோ.. சத்தொயராஜ் நடிச்ச படங்களை பத்தி சொல்ல்ப்போறேன்ன்னு .. மேலெ படிக்கிறதா இருந்தா….படிக்காதீங்க.. அப்படியே..நடைய கட்டுங்க..அப்புறம் பிள்ட்-அப் குடுத்து ஏமாத்திட்டாங்க ன்னு என் மேலெ கேஸெல்லாம் போடக்கூடாது….(..அது செரி.. நீங்கெல்லாம் கேஸா போடுவீங்க.:-& … ஒரு தொடர்-பதிவேயில்லே போட்டிடுவீங்க.. ஆளை விடுங்க சாமிகளா ^:)^ )

செரி மேட்டர்க்கு வருவோம்… இதுவும் ஒரு செய்தி விமர்சான்ம் தான்.. மேலே இருக்கிற Title ஐ இன்னும் கொஞ்ச நாளிலே Jharkhand MLA , திரு.சுக்ராம் சொல்லப்போரார்.39 வயது கொண்ட இவர் 9-std வரைக்கும் தான் படிச்சிருக்கார்.. எம்.எல்.ஏ ஆனதுக்கப்புறம்.. அங்க இருக்கிர மக்களுக்கு தன்னாலான் நல்லதெல்லாம் பண்ணியிருக்கிரதா செய்தி (..சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்கோ..)

செரி இத்தனை வருஷத்துக்கப்புறம் இப்பொ என்ன திடீர் ஞ்யானோதயம் ..ன்னு கேட்டதுக்கு..அவர் என்ன சொன்னார் தெரியுமா… ” நான் சாதாரணமானவனாக் இருந்த போது.. என்னை ” illitrate – अन्पढ ” ன்னு சொல்லி ரொம்ப நோகடிச்சிருகாங்க :((….எம்.எல்.ஏ ஆனதுக்கப்புறம் அதிகாரிகள் (bureaucrats) செரியா இதுவும் சொல்லறதில்லை..நேரடியா எதுவும் சொல்லலைன்னா என்ன்…”” இந்த illitrate க்கு என்ன புரியப்போகுதுங்கிர தோரணை..””” .. இதெல்லாம் தான் தான் ஒரு வைராக்கியம் வைச்சு மெட்ரிக் பாஸ் பண்ணணும் ன்னு வெறியோட பரீஷெ எழுதி இருக்கேன்….அது மட்டுமில்லை.. படிச்ச பிள்ளைளகளுக்கு Gold-Medal குடுக்கிறப்போ எனக்கு ஒரு Inferiority complex மெத்த் -படிச்ச பசங்களுக்கு மெடல் குடுக்க எனக்கு என்ன அறுகதை இருக்கு:-SS….ன்னு சொன்னாரு

இப்போ.. ரிசல்ட் வந்ததுக்கப்புறம்… இவர் – படிச்சு தான் பாஸ் பண்ணிநாரா…இல்லே.. எக்ஸாமினர் இவர் எம்.எல்.ஏ ன்னு பாஸ் பண்ணி விட்டாரானெல்லாம் ..ன்னு சின்னப்பிள்ளைத்தனமா எல்லாம். கேக்கபடாது.[-X. ஆமா..

இதுலே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்..””நாம் தான் ஏம்.ஏல்.ஏ யாச்சே..மெட்ரிக் பாஸ் பண்ணி தான் அறிவை வளக்கணுமா என்ன…இந்த வசிலெ போய் சின்ன பசங்க கூடயெல்லாம் உக்கரணுமா…(அவர் மகனும் X-std பரீஷை எழுதரார்..அதாவது அப்பா-பிள்ளை ஒரே கிளாஸ் ) “” அப்படியெல்லாம் நினைக்காம் .. படிப்பிக்குண்டான முக்கியத்துவத்தை புரிஞ்சுகிட்டு ஏதோ தன்னாலான ஒரு முயர்ச்சி எடுத்திருக்கார்..=d>. இது பாராட்ட படவேண்டியதில்லையா ..? ? ? =d>

152 – 800 வருஷம் ஜெயில் தண்டனை :-O

துவும் ஒரு செய்திய்யை சாற்ந்த பதிவு தான்..Crime against children க்காக Silicon Valley நீதிமன்ற்த்தில் தீற்ப்பு விதிகபட்டது

அங்கே law-enforcement எப்படின்னு எனக்கு தெரியாது.. ஆனா..பல நேரத்துலே நாம சொல்லியிருக்கோம்..”அவனை / அவங்களை மாதிரிபட்டவங்களையெல்லாம் ஜென்மத்துக்கும் வெளியே விடகூடாது “..(கோபத்திலெ – ஆத்திரத்திலே – ஆதங்கத்திலெ.. ன்னு பல emotional state லெ சொல்லியிருப்போம்)..மேலே செய்தியில் இருக்கும் குற்றவாளிக்கும் அதே நிலமை தான்..ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாது..:-S

“Lot of time to reflect on…”

குற்றவாளிகள் திருந்துவதுக்கு இருக்கும் வாய்ப்பை இந்த தண்டனை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுகிறது ..ன்னு சொல்லரவங்களுக்கு..செய்தியை – படிங்க..உங்க – நெஞ்சை தொட்டு சொல்லுங்க.. இந்த-குற்றவாளி – திருந்த வாய்ப்பிருக்குன்னு .. ஒரு அணுவாவது உங்களுக்கு நம்பிக்கை இருக்கா b-( ?

தமிழ் வாத்தியாரா ..சிங்கபூர்லெ உங்களை தேடறாங்க :-"

மிபத்துல வந்த செய்தி.. சிங்கபூர்லெ இளைஞ்சர்களுக்கிடையே தமிழ் பேசுவது ரொம்ப கம்மியாடுச்சாம்.. >-)

இதுக்கு முக்கியமா.. அங்கே சீனர்கள் தான் அதிகபடியா இருக்காங்களாம்..வெறும் 6% தான் இந்தியர்கள்..அதுலெயும் தமிழ் பேசுபவர்கள் ரொம்ப கம்மியாம்

அதனால Pre-School – junior college லெ எல்லாம் spoken Tamil (spoken-english மாதிரி) க்கு க்ளாஸ் , இணையதளம்.. சொல்-உச்சரிப்புக்கு voice files எல்லாம் பெரிய அளவிலே செய்யப்போறாங்களாம்

உங்க தமிழ் வாத்தியாரை உடனடியா சிங்கபூர் அனுப்பிவையுங்க.. எத்தனை நாள் தான் அதே ஓட்ட-சேர் லெ உக்காந்து பாடம் நடத்துவார்..பாவம்..அவரும் வெளிநாடெல்லாம் சுத்திபாக்கட்டுமே 8->