ATM லே காசு எடுத்தா வங்கிக்கு service fee கட்டணும்

ப்பெல்லாம் வங்கிக்கு யரும் காசு எடுக்க போகரதே இல்லை… அதுக்கு தான் ATM இருக்கே… (ATM == Any Time Money ன்னு அப்பா இருக்கார்னெல்லாம் சொலக்கூடாது… இது ஒரு ஸீரியஸ் பதிவு..நிலமையை பார்த்தீங்களா.. இதெல்லாம் சொல்லவேண்டியதா இருக்கு..),,ஹ்ம்..ஹ்ம்… சும்மா கார்டை போட்டோமா.. காசை எடுத்தோமா… ( தெவைப்பட்டா.. mini statement கூட எடுத்து வச்சுக்கலாம்).. அப்புறம் எப்பவாவது நேரம் இருக்கும்போது வங்கிக்கு போய் பாஸ்புக்கை அப்டேட் பண்ணிக்கலாம்… அது கூட வெறும் ஒரு ஆதாரத்துக்கு தான்.. ஏன்னா நம்ம வங்கி கணக்கு வழக்கை internet banking மூலம் இணையதளத்திலேயே பார்த்துகொள்ளலாம்

ஒரு விதத்திலே ATM வசதியும் கூட.. மொத்த்மா ஒரு பெரிய துகையை வீட்டிலெ வச்சுக்கிரது ஒண்ணும் புத்திசாலித்தனம் இல்லை… அப்பபோ தேவைக்கு ஏத்தா மாதிரி withdraw பண்ணுவதே சரின்னு என்னுடைய கருத்து. இப்படி ATM மும் நானும் 3-4 முறை ஒரு மாசத்திலே சந்திச்சுக்குவோம்.. பின்னே.. பால்-பேப்பர் – மளிகை- ஸ்கூல் பீஸ்– அல்லறை சில்லறை செலவு .. ன்னு என்னெல்லாம் இருக்கு… இத்த்னை இருக்க ரெண்டு நாள் முன்னே படிச்ச சேதி.. என்னை கதிகலங்க வச்சது.. சேதி என்னனா.. இனிமேல் (தனியார் வங்கியில்) ATM லிருந்து காசு எடுத்தா.. வங்கிக்கு நாம service fee ங்கிர முறையிலே பணம் கட்டணும்

என்னடா இதுன்னு மனசுக்குள்ளே ஒரு பீதி..சரி.. இது தனியார் வங்கியிலே மட்டும் தான்னு தலைப்பை பார்த்து நினைச்சேன்.. சேதியை மேலும் படிக்கும் போது… ஒருவேளை State bank Groups ல் இருக்கும் வங்கிகளுக்கும் இதுமாதிரி ஏதாவது service fee இருக்குமோன்னு ஒரு சந்தேகம் கிளம்பிச்சு.. அதுக்கு காரனம்.. நான் சிகப்பு கலர்லே கோடுபோட்டிருக்கேனே… அந்த statement தான் காரணம்
சந்தேகம் வந்து கூகிள்லே தேடிநதிலெ.. இந்த செய்தியை CNN.IBN மற்றும் NewIndPress லெயும் உறுதி படுத்திட்டாங்க.

அடுத்த கட்ட நடவடிக்கையா.. நான் நடையை கட்டினேன்.. எங்கே… அட வங்கிக்குதான்… என்ன ஆனாலும் இதை அவங்க கிட்டே கேட்டு சந்தேகத்தை நிவிர்த்தி செஞ்சுக்கலாம்ன்னு தான்.. பேசி பார்த்ததிலே சில திடுக்கிடும் உணமைகள் தெரிய வந்தது… கவனமா படிங்க… இதெல்லாம் நீங்க கேட்டாதான் சொல்லுவாங்க… இல்லைன்னா… உங்க அக்கவுண்டிலிருந்து கம்முன்னு service fee ஐ அவங்களே எடுத்து… பாஸ்புக்கிலே entry யும் போட்டுகுடுப்பாங்க.

நான் அறிந்த தகவல் – state bank Group ல் இருக்கும் வங்கிகளுக்கு

  1. ATM ல் ஒரு நாள் நீங்கள் 15,000/- மட்டுமே எடுக்க முடியும்.. (இதுக்கும் அதிமா எடுக்க முயர்ச்சி பண்னினீங்கன்னா…ATM ..”தரமுடியாது.. பேமானி.. போயிட்டு நாளைக்கு வா”…ன்னு சொல்லும்.
  2. 6 மாசத்துக்கு 50 ATM transactions செய்ய தான் நமக்கு அனுமதி உண்டு. ( ஒரு வேளை நீங்க இந்த 50 Transactions ஐ 2 மாசத்திலே நடத்திட்டீங்கன்னா…).. 51st transaction லிருந்து 50 /- ருபா Service fee / Transaction fee ன்னு நாம வங்கிக்கு கட்டணும்
  3. உங்களது ATM கார்ட் ஏதாவது State Bank Group of banks ( SBI, SBT,SBM, SBS… ) ஐ சேர்ந்ததா இருந்தா…நீங்கள் வேறு ஒரு state bank Group ஐ சேர்ந்த வங்கியின் ATM ல் எந்த விதமான extra charges இல்லாமல் பணம் எடுக்கலாம்…..

    உதா:— உங்க கிட்டே SBM ன் ATM கார்ட் இருக்கு.. ஆனா .. உங்க வீட்டுப்பக்கத்திலே SBI ன் ATM தான் இருக்கு… இப்படி இருக்கும் பக்ஷத்தில் நிங்கள் தாராளமாக ATM லிருந்து காசு எடுக்கலாம்…. at no extra costs…. ஆனால்…..

    .

  4. கீழே எழுதியிருக்கும் வங்கிகளின் ATM ல் நீங்கள் உங்கள் கார்டை உபயோகித்தூ பணம் எடுத்தால்… ஒவ்வொரு transaction க்கும் Rs. 25 + 12.24% service t
    ax ன்னு கட்டணும்… இது மட்டுமமில்லை…. balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டு

    HDFC
    UTI
    Punjab National Bank
    Andhra Bank
    Indian Bank
    Dena Bank
    Co-operative Banks
    Uco Bank
    Bank of India

  5. நீங்க state bank groups ன் ATM லேயும் எடுக்காம… மேலே பட்டியலில்லருக்கும் வங்கியிலும் எடுக்காம… வேறே வங்கிகளின் ATM ல் காசு எடுத்தால் ஒவ்வொரு transaction க்கும் Rs. 50 + 12.24% service tax ன்னு கட்டணும்…… balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டு

அதனால மக்கஸ்.. உடனே உங்க வங்கியுடன் தொடர்பு கொண்டு .. அவங்க விதிமுறை என்னன்னு கேட்டு தெரிஞ்சு செயல்படுங்க… அனாவசியமா வங்கி வெப்சைட்லே விவரம் தேடறேன் பேர்வழின்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. வங்கியிலே நேரடியா போய் கேட்டாலும்… “”” இப்போ இதெல்லாம் உங்களுக்கு விலாவரியா (!!!) விளக்க எங்களுக்கு நேரமில்லை… மத்த்யானதுக்கு மேலே வாங்க..”””… ன்னு தான் சொல்லுவாங்க… ஸோ… உங்க ATM withdrawal slip க்கு பின்னாடி இருக்கும்(24x 7) helpline நம்பருக்கு போண்போட்டு விவரங்கள் கேளுங்க…கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு… சும்மா தூக்கி குடுக்க மனசு வருமா என்ன ? ? ?

20 Replies to “ATM லே காசு எடுத்தா வங்கிக்கு service fee கட்டணும்”

  1. ம்ம் ஆரம்பத்துலய நீங்க சொன்ன மாதிரி எனக்கு ATM என் வீட்டுக்காரர் தான்..வேணா அவருக்கு இந்த லிங்க் அனுப்பறேன்.. 🙂 சீரியஸ் பதிவுன்னதும் இப்படி விளையாட்டா பின்னூட்டம் போடலாமோன்னு ஒரு பயம் இருந்தாலும்..ஒரு தில்லுடன் இதை போட்டுட்டேன்.

  2. லெட்சுமி…
    //வேணா அவருக்கு இந்த லிங்க் அனுப்பறேன்///
    அனுப்பினா மட்டும் போதாது.. நீங்களும் விவரம் என்னனு கேட்டு தெரிஞ்சுக்கணும்.. இன்னொருத்தருக்கு சொல்லலாமில்லே
    ///சீரியஸ் பதிவுன்னதும் இப்படி விளையாட்டா பின்னூட்டம் போடலாமோன்னு ஒரு பயம் ///
    you too …. brutus

  3. வாங்க விஜயன்…
    இத்த்னை நாள் எனக்கு P.2 தெரியலை… இதெல்லாம் கேட்டாத்தான் சொல்லறாங்க… புதுசா அக்கவுண்ட் ஆரம்பிக்கும் போது கூட சொல்லரதில்லை.. பாஸ்புக்லே debit வந்து நாம குய்யோமுய்யோன்னு கத்தும் போது ரொம்ப நிதானமா சொல்லுவாங்க

  4. இது இங்கிருக்கும் வங்கி ஆட்களுக்கு தெரியாமல் போகக்கடவது. :-))
    இங்கும் கொண்டுவரலாமா என்று யோசித்து இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள்.

  5. வாங்க குமார்
    ம்ம்.. ஏதோ.. உஷாரா இருங்க.. impliment பண்ணினதும் அவங்க சொல்லுவாங்கன்னு எந்த கியாரெண்டீயும் இல்லை… அப்பப்போ.. untracked debits இருக்கான்னு மட்டும் கவன்மா பாருங்க

  6. இந்த கொள்ளைகளுக்கு எதிராக வங்கி ombudsman இடம் புகார் செய்யலாமா? அந்த ombudsman அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்தவர்கள் யாரும் உண்டா?

  7. Thank you so much for the useful information and the links. The seriousness with which you have shared your observations deserves appreciation; and more importantly needs popular attention.

  8. Hi,

    Useful information though.But too late. There are lots of banks which provide u unlimited transactions on some special accounts. Salary accounts in some private banks also fall under this. More over, there are few schemes in which you can withdraw money from any ATMs without additional service charge, with affiliated banks and few more with some yearly charges. There are salary accounts and gold / platinum ATM/Debit cards with which u can withdraw or transact upto 50K perday. When there is no choice but to withdraw money from an alien ATM,withdraw the maximum possible amount. The service charge could be same. Ex., Rs67 for Rs1K and also Rs10K. Nothing is free in this world. ICICI has money to door scheme in which u just need to call the customer care and order!!! for money [infact from ur account] and they will deliver it to ur door step. There are lots of schemes in various banks. The best possible way to avoid all these charges is to open a salary account or to move to a bank which provides unlimited transactions for a minimal yearly charge. Ombudsman has nothing to do with this as you have signed in for all these when you accepted your ATM card. This very technology is useful,safe and handy at times, but like any other thing, u need to learn how to get the best of it. No worries.

  9. நாஞ்சிலான்
    வாங்க..
    ///இந்த கொள்ளைகளுக்கு எதிராக வங்கி ombudsman இடம் புகார் செய்யலாமா??///

    இதுக்கும் ombudsman க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கோபி சொல்லரார்..

  10. கொபி..
    வாங்க..
    //Useful information though.But too late///
    என்ன பண்ண… இப்பொ தானே ஞ்யானோதயம் வந்தது..;)
    //The service charge could be same. Ex., Rs67 for Rs1K and also Rs10K. ///
    இது ரொமப்வே உபயோகமான டிப்.. we tend to over look this
    //The best possible way to avoid all these charges is to open a salary account or to move to a bank which provides unlimited transactions for a minimal yearly charge///
    அப்படி உங்களுக்கு தெரிஞ்ச வன்கி இருந்தா சொல்லுங்களேன்.. நான் கேட்ட வரை..many are into “limited number of transactions”.. தக்வல் சொன்னா ரொம்ப உப்யோகமா இருக்கும்..
    //u need to learn how to get the best of it. No worries///
    ஆமாம்..ஆமாம்.. விஷம் தெரிஞ்சாச்சில்லே.. இனிமே நோ வரீஸ்

  11. வாங்க சாமி
    இந்த பதிவை ஒரு refrence ஆ மட்டும் எடுத்துக்குங்க.. கண்டிப்பா உங்க ATM withdrawal slip க்கு பின்னாடி இருக்கும் போண்நம்பருக்கு கால் பண்ணி விவரங்களை தெளிவா – விவரமா கேட்டுக்கோங்க..ஏன்னா.. சில details வங்கி-வங்கி வித்தியாசப்படலாம்

  12. Priya..
    Yes..I am also familiar with that.. but for the past couple of years.. the banks ( Statebanks) are sending intimation to the cutomers.. that the bank is providing them with ATM(cum)debit card .. for free…and all the customer need to do is go to the bank personally-Sign-Collect the PIN

    An unsuspecting person would not know to ask.. how many times i can withdraw.. what is the max withdrawal per day… what is the extra cost for excessive wthdrawal
    The bank does not answer all these unless asked…So its like.. “NOT TELLING THE WHOLE TRUTH”.. at the same time we cant accuse them of lying .., isnt it

  13. i called up customer care, citibank, bangalore and asked about the charges. they said citibank is not charging for the atm withdrawals done in citibank atm.

    but i dont know.. soon they might also charge, all depends on how people react to this.

  14. சாமி..
    நல்ல காரியம் செய்தீங்க.. அதோட #2 யும் கேட்டுக்கொங்க… மற்ற வங்கியின் ATM ல் என்ன கட்டணம் உண்டுனெல்லாம் கேட்டா தான் சொல்லுவாங்க.. நாம பாட்டுக்கு அவசரத்துக்கு பக்கத்திலெ இருக்கும் ATM லே 100/- எடுத்து..acct லே 150 /- debit ஆச்சுன்னா.. ? ? ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *