இந்த உதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.:-W. ஆ.அசக்ச்சா..ஆ ஜிஜக்ச்சா =D>

முன்னே ஒரு நாள் Noida lawyers க்கு ஒரு சபாஷ் சொல்ல சொன்னேன் ;;) இல்லையா.. இப்பொ இன்னும் ஒரு படி மேலெ பொயி Noida Public க்கும் ஜோரா ஒரு ” ஓ” போடுங்க மக்களே…. ஏன்னு கேக்கறீங்களா,, நேத்து TV News ( CNBC – NDTV -Aajtak _etc) பார்தீங்களா.. பொதுமக்கள் Lawyers எல்லாரும் செர்ந்து Mohinder singh Pandher & Surendra ஐ சும்மா சாத்து-சாத்துன்னு =D> சாத்திட்டாங்களாம்.. However, மருத்துவமனை பரிசொதனையிலெ இரெண்டு பெருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு discharge பண்ணிட்டாங்களாம்.. >:) News Item here and the Vedio of the public fury

நீங்க என்ன சொல்லறீங்க.. இவங்களை நடு-ரோட்டுல வச்சு சாத்திநதுல ஏதாவது தப்பு இருக்கா..?.. என்னை கேட்டா.. சாத்தினதோட நிறுத்தாம கரும்-புள்ளி ; செம்புள்ளி குத்தி கழுதை மேலே ஊர்வலமா கொண்டுபோனாலும் போதாது. :>

இந்த கலாட்டாவிலே நம்ம UP Police அவங்க வேலைய்யை கனக்கச்சிதமா செய்திருக்காங்க.நிறைய குழந்தைகள் காணாம போனப்பவும் உடனடியா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. X( . கொஞ்சம் (ரொம்பவே) தாம்தமாகதான் React பண்ணினாங்க..அதேபோல.. இந்த இரெண்டுபேரையும் பொதுமக்கள் சும்மா டப்பு-டப்பு ன்னு சாத்துறப்பவும் உடனடியா ஒண்ணும் பண்ணாம கொஞ்சம் (நிஜமாவே கொஞ்சம்) தாமதமாக தான் React பண்ணிநாங்க.. :-T

Noida வழக்கறிஞர்களுக்கு ஒரு சபாஷ்…. ஓ போடுங்க…

காலையிலெ தான் Star News ல் பார்த்தேன்.. Noida ல் எல்லா வழக்க்றிஞர்களும் ஒரு மனதா குற்றம் சாற்றபட்ட Mohinder and Surendra சார்பிலெ வாதாட மாட்டோம்ன்னு அறிக்கை விட்டிருக்காங்க…அதுமட்டும் இல்லாமல்.. பாதிக்கபட்ட பெற்றோர்களுக்கு இலவச சட்ட-ஆலோசனை வழங்கப்போவதாகவும் சொல்லி இருக்காங்க..இதனால் குற்றம் சாற்றபட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதை சீக்கிரப்படுத்தவே இந்த அறிவிப்புன்னும் சொல்லியிருக்காங்க….. சபாஷ்…
ஒரெ விஶயத்தை பல்வேறு விதத்தில் வாதிக்கும் வழக்கறிஞர்களுக்குள் இப்படி ஒரு ஒத்துமை..சபாஷ்..
Setting aside personal differences and comming togather for a common cause… சபாஷ்..

விளையாட்டு வினையாடுச்சே.. இனிமேலாவது இதை தடுக்க யோசனை பண்ணி அமல் படுத்துங்க

ன்னிக்கி Times of India படிக்கலையா..? உங்களுக்கெல்லாம் ஞயாபகம் இருக்கும்ன்னு நினைக்கரேன்.. சில நாட்களுக்கு முன்னாடி நான் “விளையாட்டு வினையாகலாமா” அப்படீங்கர தலைப்புல ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது Dhoom-II படம் பார்த்து அது போலவே சாஹசம் பண்ண ஆசைபடுகிர பசங்க எப்படி அசம்பாவிதங்களுக்கு ஆளாகுறாங்கன்னு.

இன்னைக்கு Times of india – Dhoom:2 spells doom for 2 teens ங்கிர செய்தி படிச்சதும் shock ஆயிட்டேன். 11 th Std படிக்கிர Mahesh & Shyam படத்துல காட்டுகிர மாதிரி Wheelie ..ie a stunt in which the bikes front wheel is raised in the air( அதாவது கிட்டதட்ட குதிரைவண்டி குடைசாயும் போது இருக்குமே , அதுமாதிரி..) பண்ணலாம்ன்னு முயர்ச்சி செஞ்சு , சமநிலை தவறி மின்-கம்பத்துல மோதி, செத்தே பொயிட்டாங்க…சே..நினைக்கவே கஷ்டமா இருக்கு..


உத்வேகமும் – உற்சாகமும் நிறம்பி இருக்கும் வயது..எவ்வளவெல்லாம் சாதிச்சிருப்பாங்களோ.. இப்படி அல்பாயுசுல போயிடுச்சே… அவங்க ரெண்டுபேர் குடும்பத்திர்க்கும் பிளாகர் சார்பாக என் ஆழந்த அநுதாபங்கள். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவங்க இழப்புக்கு யாராலையும் ஈடுகட்ட முடியாது.. எல்லம் வல்ல இறைவன் தான் அவங்களுக்கு தெம்பும் தைரியமும் கொடுக்கணும்.

இன்னிக்கி அதே செய்தியிலெ இன்னொன்றும் குறிப்பா சொல்லியிருக்காங்க.. அதாவது Yash Chopra எச்சரிக்கை சொல்லி ஒரு துணுக்கு படத்துல சேர்த்திருக்காராம். .. அட இதை தானே நானும் என்னோட பதிவுல சொன்னேன். ..

இப்பொகூட..இதோ பண்ணறேன்– இப்பொ பண்ணரேன்னு காலம் கடத்தாம கூடிய சீக்கிரத்துல “எச்சரிக்கை -துணுக்கு” ஐ படத்துல சேர்த்தா தான் அதுக்குண்டான பயன் கிடைக்கும். இல்லைன்னா காலம் கடந்த பிறகு சூர்ய-நமஸ்காரம் பண்ணுகிர மாதிரி, எச்சரிக்கை போட்டும் .. பிரயொஜனம் இல்லாம பொயிடும்.

Yash Chopra க்கு தமிழ் படிக்க தெரிஞ்சவங்க யாராவது எங்களைபோல உள்ளவங்க சார்பிலெ இதை எடுத்து சொல்லுங்க…

விளையாட்டு வினையாகலாமா ? ? ?

ன்றைக்கு படித்த ஒரு செய்தி ..ஹ்ரித்திக் ரொஷன் நடித்து வெளிவந்த Dhoom-II படத்தை பார்த்து Rohit [6th std], 13 வயது பைய்யன் வீட்டிலெ காசு திருடி (13,000/-) ஹ்ரித்திக் மாதிரி dress ம் கிட்டதட்ட படத்துல வருகிற மாதிரி Baterry openrated பைக் வாங்கி இருக்கான்.Highway ல வேகமா போகணும்ன்னு முயர்ச்சி செஞ்சுருக்கான்..நல்ல வேளை highway Police பாற்த்து Station க்கு கூட்டிட்டு பொயிட்டாங்க.இவன் சிருபிள்ளைத்தனமா ஏதாவது பண்ணி highway ல ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா பெத்தவங்க எப்படி பதறிப்போவாங்க.
முழு விவரம் இங்கே படிங்க.

நீங்க கேக்கிறது புரியுது..என்ன இப்பொ மட்டும் தான் பசங்க வீட்டுல காசு திருடராங்களான்னு.. கொஞ்சம் பொறுங்க. ஓரு கதை படிச்சாலோ – அல்லது சினிமா பார்த்ததுனாலயோ எந்த பிள்ளையும் மொத்தமா கெட்டுப் பொயிடமாட்டாங்க.அதாவது Rohit உதாரணமாய் வைத்து சொன்னால்.. நேத்து படம் பார்த்துட்டு வந்து – இன்னிக்கி அந்த பய்யன் இப்படி ஒரு காரியத்தை கண்டிப்பா பண்ணியிருக்க மாட்டான்–பண்ணி இருக்கவும் முடியாது.

ஹ்ரித்திக்கின் Motor bike சாஹசங்களும் போலீஸ் கண்ணில் மண் தூவுவதும் அவனை ரொம்ப கவர்ந்ததாக சொல்லி தானும் அவ்வாறே செய்ய முயற்ச்சி செஞ்சுருக்கான்.ஒரு கட்டத்தில் நிழல்-சம்பவங்களுக்கும் நிஜ- சம்பவங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவன் உணர மறந்துவிட்டான். 6std பய்யன் கிட்டெ எவ்வளவு முன்யொசனையும் தொலைநோக்கு பாற்வையும் எதிர்பார்க்கிறது.

தவறு யார் மேல.. Dhoom-II படம் எடுத்தவங்களா?? படம் பார்த்து.. ” ஹ்ரித்திக்கு எவ்வளவு பேரு-புகழ்-பாராட்டு..எல்லாம் இந்த மாத்திரி சாஹசங்கள் செஞ்சதுநால தானே..நானும் இப்படி செய்தால் என்னையும் எல்லாரும் ஒரு மதிப்போட கவனிப்பாங்க”” ..அப்படி நினைத்த Rohit ஆ
இல்லை வீட்டுல எப்பொ பய்யன் சினிமால வருகிர Hero போல நடை-உடை-பாவனை எல்லாம் பழக ஆரம்பிச்சப்பொ.. அதை கனிவா அணுகி வித்தியாசத்தை உணர்த்தாத பெற்றோர்ரா..இதுல யார் மேல குறை சொல்ல…பாவம் பெத்தவங்க.. அவங்களும் சொல்லாமலா இருப்பாங்க..

Shaktimaan ன்னு ஒரு தொடர் வந்த காலத்துல Shaktimaan போல பறக்க ஆசைப்பட்டு 10th floor லெ இருந்து ஒரு பய்யன் Car க்கு பயன்படுத்தபடும் Plastic coverஐ முதுகில் கட்டிகொண்டு குதித்தது இன்னும் நினைவிருக்கலாம்.

சின்ன பசங்க பண்ணர இந்த மாதிரி குறும்புகள் எல்லாமே பெரும்பாலும் விபரீதத்துல தான் முடியுது. ஆனா அதை உணர்கிற வயசொ அல்லது பக்குவமோ அவங்க கிட்டே இருக்கரதில்லை.இப்படி இருக்க இதை தடுக்க எனக்கு ஒரே ஒரு யொசனை தான் தோணுது.

இது எல்லாமே ஒரு Hero Worship னால நடக்கிற அசம்பாவிதங்க்ள். அதனால இதுக்கு தீர்வும் அதே Hero வால் தான் செய்யமுடியும். இந்த மாதிரி சாஹச படங்கள் செய்யும் Hero க்கள் படம் ஆரம்பிக்கும் முன்னே மற்றும் படம் முடிந்த பிறகும் ஒரு 2 min சின்ன பசங்க கிட்டே இந்த சாஹசங்கள் எல்லம் Done with wires and some camera Trick ன்னு பேசுகிற மாதிரி Vedio Clip வைச்சா, பசங்களும் நம்ம Hero வே சொல்லிட்டாரு இப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு , அப்படின்னு ஒழுங்கா நடந்துக்குவாங்க இல்லையா

விளையாட்டு வினையாகாம இருந்தா செரி…