விளையாட்டு வினையாடுச்சே.. இனிமேலாவது இதை தடுக்க யோசனை பண்ணி அமல் படுத்துங்க

ன்னிக்கி Times of India படிக்கலையா..? உங்களுக்கெல்லாம் ஞயாபகம் இருக்கும்ன்னு நினைக்கரேன்.. சில நாட்களுக்கு முன்னாடி நான் “விளையாட்டு வினையாகலாமா” அப்படீங்கர தலைப்புல ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது Dhoom-II படம் பார்த்து அது போலவே சாஹசம் பண்ண ஆசைபடுகிர பசங்க எப்படி அசம்பாவிதங்களுக்கு ஆளாகுறாங்கன்னு.

இன்னைக்கு Times of india – Dhoom:2 spells doom for 2 teens ங்கிர செய்தி படிச்சதும் shock ஆயிட்டேன். 11 th Std படிக்கிர Mahesh & Shyam படத்துல காட்டுகிர மாதிரி Wheelie ..ie a stunt in which the bikes front wheel is raised in the air( அதாவது கிட்டதட்ட குதிரைவண்டி குடைசாயும் போது இருக்குமே , அதுமாதிரி..) பண்ணலாம்ன்னு முயர்ச்சி செஞ்சு , சமநிலை தவறி மின்-கம்பத்துல மோதி, செத்தே பொயிட்டாங்க…சே..நினைக்கவே கஷ்டமா இருக்கு..


உத்வேகமும் – உற்சாகமும் நிறம்பி இருக்கும் வயது..எவ்வளவெல்லாம் சாதிச்சிருப்பாங்களோ.. இப்படி அல்பாயுசுல போயிடுச்சே… அவங்க ரெண்டுபேர் குடும்பத்திர்க்கும் பிளாகர் சார்பாக என் ஆழந்த அநுதாபங்கள். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவங்க இழப்புக்கு யாராலையும் ஈடுகட்ட முடியாது.. எல்லம் வல்ல இறைவன் தான் அவங்களுக்கு தெம்பும் தைரியமும் கொடுக்கணும்.

இன்னிக்கி அதே செய்தியிலெ இன்னொன்றும் குறிப்பா சொல்லியிருக்காங்க.. அதாவது Yash Chopra எச்சரிக்கை சொல்லி ஒரு துணுக்கு படத்துல சேர்த்திருக்காராம். .. அட இதை தானே நானும் என்னோட பதிவுல சொன்னேன். ..

இப்பொகூட..இதோ பண்ணறேன்– இப்பொ பண்ணரேன்னு காலம் கடத்தாம கூடிய சீக்கிரத்துல “எச்சரிக்கை -துணுக்கு” ஐ படத்துல சேர்த்தா தான் அதுக்குண்டான பயன் கிடைக்கும். இல்லைன்னா காலம் கடந்த பிறகு சூர்ய-நமஸ்காரம் பண்ணுகிர மாதிரி, எச்சரிக்கை போட்டும் .. பிரயொஜனம் இல்லாம பொயிடும்.

Yash Chopra க்கு தமிழ் படிக்க தெரிஞ்சவங்க யாராவது எங்களைபோல உள்ளவங்க சார்பிலெ இதை எடுத்து சொல்லுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *