Microwave ன் சுயசரிதை – பாகம் -5 (முற்றும் )

நாம பழக ஆரம்பிச்சு கிட்டதட்ட ஒரு மாதம் ஆகுதில்லே.. நாள் போனதே தெரியலை..அவ்வளவு ஸ்வாரஸ்யமா இருந்துது..உங்களை முதல் முறையா என் கதை சொல்ல சந்திச்ச போது இருந்த நினைவுகள் இன்னும் பசுமையா இருக்கு. இது தான் என் கதையின் கடைசி கட்டம் .. என்னை வாங்குவது ஒன்னும் இந்த காலத்திலே செப்பிடிவித்தை இல்லை…ஆனால் நம்ம ரெண்டுபேருக்கும் ஒரு சுமுகமான நட்பு இருக்க்ணும்னா .. சில பாதுகாப்பு விதிகளை நீங்க தவறாம கடைபிடிக்கனும்

1 . நான் பிரீயா ( காலியா – Empty ) யா இருக்கும் போது க்ண்டிப்பா switch on செய்யக் கூடாது.. சூடாக்க உள்ளெ ஒண்ணுமே இல்லைன்னு நான் ரொம்ப சூடாயிடுவேன்

2 . உருளைக்கிழங்கு மசாலா கறியை என்கிட்டே சமைக்க சொல்லுங்க.. ஒத்துக்கறேன்.. அதுக்கக Microwave-safe கொப்பரையிலே எண்ணை வைச்சு அப்பளம் பொரிச்சு குடுன்னு சொன்னா… தாங்காது சாமி… காரணம்… எண்ணையின் வெப்பத்தை அவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்த முடியாது.. அடுப்பிலேயே கொஞ்ச நேரம் அதிகமா எண்ணைய்யை காயவைச்சு பாருங்க… எண்ணை அப்பிடியே உணர்ச்சிவசப்பட்டு (நேருப்பு பிடிச்சு) பொங்கி எழுந்துடும்… அடுப்புக்கே இந்த கதின்னா நானெல்லாம் எம்மாத்திரம் 🙁

3 . Pace maker உபயொகிப்பவர்கள் தங்களது உபகரணம் நல்ல செயல்பாட்டில் உள்ளதாவென்று உறுதி செய்த பின்ன்ரே என்னை இயக்கலாம்… சந்தேகமான பக்ஷத்தில்… என் கிட்டேயே வரக்கூடாது அல்லது.. வேறு யாரையாவது உபயோகப்படுத்த சொல்லி கேட்க்கலாம்.. காரணம்… என்னுள் இருக்கும் Radiation , Pacemaker ன் செயல்பாட்டுக்கு குறுக்கீடு செய்யலாம்…இது ஆபத்தில்லையா ? ?

4 . குழந்தைகளை கோண்டு என்னை இயக்க சொல்லாதீங்க..அவங்க.. சூப்பர் ஸ்டார் மாதிரி.. நீங்க சொல்லி குடுத்ததையெல்லாம் சரியா செய்வாங்க…சொல்லி கொடுக்காத்ததையும் செய்தே பாத்துடுவாங்க.. எதுக்குங்க வம்பு… அவங்களுக்கு சாதக-பாதகங்கள் புரியும் வயசிலே என்னை இயக்க சொல்லிக் குடுங்க.. பொறுப்பாவும் இருப்பாங்க பாதுகாப்பாகவும் இருக்கும்

5 . நான் சமையலில் பிசியா இருக்கிரப்போ… சரியா சமைக்கறேனான்னு முன்னாடி மூஞ்சிய வைக்கக்கூடாது… இப்பிடி செய்தா அம்மா என்ன பண்ணுவாங்க….( தெரியாதா… அடுத்த முறை அம்மா சமைக்கிறப்போ செய்து பாருங்க… நல்லா அம்மா வாயிலேயிருந்து வாங்கி கட்டிக்குவீங்க \:D/ )

6 . எனக்கு தோழியா ஒரு சமையல் குறிப்பு புத்தகமும் குடுப்பாங்க.. ( என்ன… என்ன்.. .””எங்கேயோ பத்திரமா வச்சிருக்கேன்.. எங்கேன்னு தான் ஞியாபகம் வரலே “” தானே… :-W ) அதிலெ என்னென்ன சமைக்க எவ்வளவு நேரம் வைக்கணும் ன்னு சொல்லியிருக்கும்.. அதெல்லாம் மெனெக்கெட்டு list போட்டு வைக்க அவங்க என்ன கேணப்பசங்களா… சில பதார்த்தங்களை அதிக நேரம் வைச்சா தீஞ்சு போகும்.. ஆப்புறம் .. “”Microwave லெ சமைச்சா என்னமோ தெரியலை… ருசியே சரியில்லை “” ன்னு மட்டும் நாகூசாம சொல்லுவாங்க

7 . பாட்டி விறகடுப்பை சாணகம் போட்டு சுத்தம் செய்வதை பார்த்த ஞியாபகம் இருக்கா.. (அட விறகடுப்பாவது..சாணகமாவது ன்னு தானே சொல்லரீங்க..) அதாவது என்ன சொல்லவறேன்னா..என்னையும் கொஞ்சம் சுத்த-பத்தமா வைய்யுங்க…அப்புறம் கப்பு-நாத்தம்னு மூக்கை பொத்திக்கிட்டீங்கன்னா X(
8 . என் வேலையானதுக்கப்புறம் மறக்காம Main Plug ஐ switch off பண்ணுங்க.. மின்சாரமும் மிச்சமாகும்.. தற்செயலாக வரும் மின்சார கோளாறுகளிலிருந்து என்னை பாதுகாக்கவும் முடியும்

9 . பாதி வேலை செய்யும்போது.. படார்ர்ர் ன்னு கதவை திரக்ககூடாது.. எனக்கு கூச்ச
மா இருக்கும்

10 . எனக்கு எப்பவாது மூட்-அவுட் ஆச்சுன்னா முதலில் Main Switch ஐ OFF பண்ணுங்க.. அப்புறம் .. என் தொழில்னுட்பத்தில் பயிற்ச்சியுள்ள நபரைக் கொண்டு மட்டுமே வைத்தியம் பண்ணுங்க..பிளீஸ்..
அம்புட்டுதேன்…

தமிழ் புத்தாண்டு வருது… எல்லாரும் பத்திரமா இருங்க..

புத்தாண்டு வாழ்துக்கள்

முற்றும்

Microwave ன் சுயசரிதை — பாகம் 3

வாங்க நேயர்களே.>:D< ..வணக்கம்..நலமா..எல்லாரும் அவுங்க-அவுங்க இடத்திலே சத்தம் போடாம உட்காருங்க..நோட்டு - பேனா எல்லாம் மறக்காம் கொண்டுவந்திருக்கீஙகில்லையா..அப்புறம் பாதி பாடம் நடக்கிரப்போ...குசு-குசு ன்னு பேசகூடாது..என்ன...செரி.. வகுப்பை ஆரம்பிக்க்லாமா..... நான் பிறந்த கதை மற்றும் நான் எப்படி இயங்குவதால் உங்கள் (சமையல்) வேலை சுலபமாகிறதுன்னு கடந்த இரண்டு பதிவிலெயும் பார்த்தோம்…இப்போ…என்னை உபயோக படுத்தி சமைப்பதாக இருந்தால்….ஏன் சில பிரத்தியேக பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…இதுகுக்கு விதி-விலக்கே கிடையாதா..படா-பேஜாராப் போச்சுப்பா.#-O..ன்னு நீங்க சொல்லுவது எனக்கு கேட்டாலும்….இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் .இவ்வளவுகு அடம் பிடிக்க காரணம் என்னகிறதை உங்களுக்கு சொல்லப்போறேன்.

உணவில் இருக்கும் நீர் – கொழுப்பு மற்றும் சக்கரையின் பரமாணுக்கள்… வான்லைகளை உறிஞ்சுவதின் காரணமாக நடக்கும் போட்டா-போட்டியில் வெப்பம் உர்பத்தியாகும் ன்னு நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம் (The collision of molecules will generate heat)..இங்கே நீங்க ஒரு விஷய்த்தை யோசிக்கணும்..

இந்த வானலைகள் (உணவு வைத்திருக்கும் ) பாத்திரத்தை ஊடுருவிச்சென்று தான் உணவை வந்தடைகிறது .. அப்போ.. வானலைகள் நேரடியக பாத்திரத்தை (பாத்திரம் செய்ய உபயோக படுத்தியிருக்கும் பொருளை) தாக்காவிட்டாலும்… உணவு சூடாகும்போது.. .உணவிலிருந்து வெப்பம் பாத்திரத்திர்க்கு ஊடுகடத்தப்படுகிறது (Heat is conducted from the food to the container)

இப்படி எனக்குள்ளே வெப்பம் அதிகமாகும்போது (உணவை பக்குவ படுத்த இந்த வெப்பம் மிக அவசியம் ) சில பிரயத்தேக பொருள்களால் செய்த பாத்திரத்தால் மட்டுமே.. தனக்கும் பாதகமில்லாமல் – உணவுக்கும் பாதகமில்லாமல் – ஏனக்கும் (என்னுள்ளே இருக்கும் வானலைகளுக்கும் ) சாதகமாக் செயல்படமுடியும் .. அப்பிடிபட்ட பாத்திரங்களை தான் Microwave Safe Containers ன்னு சொல்கிறோம்

எவையெல்லாம் Microwave Safe Containers ? ?

குத்துமதிப்பா சொல்லணும்ன்னா… பீங்காண் – Plastic – கண்ணாடி பாத்திரம்… இவைகளில் எதுக்கெல்லாம் ”
Microwave Safe ( மைக்றோவேவ் பாதுகாப்புடன் ), Microwave cookware (மைக்றோவேவில் சமைக்க பயன்படுத்தக்கூடிய பாத்திரம்) , One time Microwave only (ஓரே ஒரு முறை மட்டுமே மைக்றோவேவில் பயன்படுத்தவும்)..
ன்னு முத்திரை இருக்கோ..

அவையெல்லாம்
தயக்கமே இல்லாமல் microwave ல் பயன்படுத்தலாம்..படத்தை பார்த்தால் இன்னும் செரியாக புரியும்…ஆனால்.. எப்போ பாத்திரத்திலே முத்திரை இல்லையோ… எக்காரணம் கொண்டும்.. அவைகளை microwave ல் பயன்படுத்த கூடவே கூடாது அப்பிடி மீறி பயன்படுத்தினால்..

உணவுக்கும் – போருளுக்கும் ( Microwave என்ன விலை கொடுத்து வாங்கினீங்க..ஞ்யாபகம் இருக்கா 😕 ) சேதாரம் நிச்சயமாக உண்டு… இது தேவையா உங்களுக்கு…

ஏன் சில பொருள்களால் செய்த பாத்திரங்கள் மட்டும் நமக்கு சாதகமா இருக்கு…மத்ததெல்லாம் ஏன் எப்படி நம்ம உயிரை வாங்குதுங்கிரதை அடுத்த பதிவிலே பார்க்கலாம்.

பாகம்-4 . . .

Microwave ன் சுயசரிதை —பாகம் 2

வாங்க…வாங்க…>:D< மீண்டும் வந்தமைக்கு நன்றி.. முந்தைய பதிவிலே நான் (நாங்கள்) உருவான கதை சொல்லியிருந்தேன்ன்..இப்பொ உங்க வீட்டிலே எனக்கு என்ன வேலை – அதை எப்படி சிய்கிறேன்ன்னு பார்க்கலாமா ..ஏதோ இவன் வாய்க்குள்ளே சாப்பாட்டை வைச்சோமா..3 நிம்ஷத்திலே ஆவி-பறக்க சாப்பாட்டோட தைய்யாரா இருக்கான் ..என்னை பத்தி தோராயமா உங்களுக்கெல்லாம் தெரியும்…எதனால்..எப்படி சாப்படு சூடாகிரது ன்னு நான் இயங்கும் முறை குறித்து இந்த பதிவிலே சொல்லப்போறேன்

வானலைகள் (Radiowaves) தான் என்னை இயங்க சிய்கிறது….இவை கிட்ட-த்ட்ட 2,500 megahertz (2.5 gigahertz) என்ற அலைவரிசையில் இருக்கும் ..படத்தில் இருப்பது போல்..இந்த வானலைகள் நேர்க்கோட்டில் பயணம் செய்து உள்ளே வைத்திருக்கும் உணவை வந்தடையும்

உள்ளே இருக்கும் பதார்த்தம் சூடாகிறது / வேகுகிறதில்லையா..இது எப்படின்னு 3 பகுதியா தெரிஞ்சிக்கலாம்

  1. 2.5 Ghz வானலைகளின் தனித்திறன்
    (Charecterstics of 2.5Ghz Radiowave)
  2. உள்ளே இருக்கும் பதார்த்தில் இந்த 2.5Ghzவானலைகளின் தாக்கம்
    (Influence of these 2.5GhzRadiowaves on food inside the oven)
  3. வானலைகள் பதார்த்தை வந்தடையும் முறை
    Path of these Radiowaves inside the oven)

  1. 2.5 Ghz வானலைகளின் தனித்திறன்
    (Charecterstics of 2.5Ghz Radiowave)

  2. இந்த அலைவரிசையில் இருக்கும் வானலைகளுக்கும் – உணவு பொருள்களிக்கும் ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் உண்டு.. நீர்சத்து – கொழுப்பு-சத்து – சக்கரை நிறைந்த பரமாணுக்கள் (water – fats – sugar molecules)..இந்த குறிப்பிட்ட வான்லைகளை (2.5Ghz சக்தி கோண்ட ).. அப்ப்டியே straw போட்டு உறிஞ்சுவிடும்

    இப்படி உறிஞ்சுவதால்…எல்லா பரமாணுக்களும்..”எனக்கு இன்னும் வேணும்”—-“எனக்கு இன்னும் வேணும்”—“எனக்கு இன்னும் வேணும்”–ன்னு ஒண்ணொட ஒண்ணு மோதும் போது..சண்டையிலே ஒரே அனல் பறக்கும்….அதாவது வேப்பம் உற்பத்தியாகும் ( The collision of molecules will generate heat )

  3. உள்ளே இருக்கும் பதார்த்தில் இந்த 2.5Ghzவானலைகளின் தாக்கம்
    Influence of these 2.5GhzRadiowaves on food inside the oven)

  4. சாதாரணமாக நாம் சமைக்கும் போது…வேப்பம்..அடுப்பின் மிக அருகில் இருக்கும் பதார்த்தம் (சமைக்கும் பாத்திரத்தின் அடிபாகத்தில் இருக்கும் பொருள்) முதலில் சூடாகும்..அப்புறம்…ஊடுகடத்தல் (conduction) காரணமாக….பாத்திரத்தில் இருக்கும் கலவை சூடாகிரது…பலதடவை.. வேப்பம் செரியான முறையில் ஊடுகடத்தப்படவில்லையென்றால் நாம்
    ” உணவு அடிபிடித்துவிட்டது ” ன்னு சொல்வதுண்டு #-O

    ஆனால்..எங்க கிட்டே சமைக்க சொல்லி … எங்களுக்குன்னே இருக்கிற பாத்திரத்திலே எல்லாத்தேயும் போட்டு கொடுத்தா,,,”ஆடிபிடிக்கவே வாய்ப்பில்லே..” அது ஏன்னு சொல்லறேன்…கவனமா படிங்க ( நாளைக்கி test வைப்பேன்..எல்லாரும் செரியா பதில் சொல்லணும்..என்னா.. ? .. ?)

    முன்னே சொன்னமாதிரி.. வானலைகள் உணவில் இருக்கும் நீர் – கொழுப்பு – சக்கரையினால்… உரிஞ்சப்படுவதால் வெப்பம் அதிகமாகுதில்லே,,, இந்த வெப்பம்…எல்லா நேரத்திலேயும்…எல்லா இடத்திலேயும்…உணவின் எல்லா பக்கத்திலேயும்….ஒரே மாதிரி தான் இருக்கும்

    நீறைய சூடு எங்கே இருக்குமே..அங்கே தானே அடி-பிடிக்கும்…நாங்க தான் எல்லருக்கும்.. பாரபக்ஷம் பார்க்காம ஒரே மாதிரி வெப்பத்தை பகிர்ந்து குடுக்க்ரோமே…அய்..அப்புறம் எப்படி அடிபிடிக்கும்..:-w

  5. வானலைகள் பதார்த்தை வந்தடையும் முறை
    (Path of these Radiowaves inside the oven)

  6. அதெப்படி எல்லா நேரத்திலேயும்…எல்லா இடத்திலேயும்…உணவின் எல்லா பக்கத்திலேயும்….ஒரே மாதிரி தான் வெப்பம் இருக்கும் ன்னு சொல்லமுடியும்…ன்னு தானே கேக்கரீங்க…. இன்னொரு முறை மேலே scroll-up பண்ணி…படத்தை உன்னிப்பா பாருங்க…
    < br />வானலைகள் நேர்க்கோட்டில் தான் பயணிக்கும்…இதை மனசிலே வச்சு தான் எங்களுடைய உள்-பகுதிய்யை வடிவமைச்சிருக்காங்க…படத்திலே கவனிச்சிருப்பீங்க..உச்சி-மண்டையிலிருந்து தான் வானலைகல் புறப்படுது..நம்ம குளியலறையில் இருக்கும் Shower மாதிரி ன்னு சொல்லலாம்…எல்லா நீர்த்துளியும் நேர்கோட்டில் தானே சஞ்சரிக்கிரது…ஆனால்..நிலத்தை வந்தடையும்போது..எல்லா நீர்த்துளியும்…ஒரு குறிப்பிட்ட இடத்திலேயா விழுகிரது…தோராயமா..ஒரு எல்லைக்குள்ளே தானே விழுகிரது…இதுக்கு கரணம்…shower ல் இருக்கும் துவாரத்தின் முறைவரிசை

    எனக்குள் நடப்பதும் இது போலத்தான்…சில வானலைகள் நேராக் உணவை வந்தடையும்… side லிருந்து வெளிபட்ட வான்லைகள்..என்னோட உள்சுவரில் (சுவர்களில் ) முட்டி – மோதி – bounce யி கடைசியா ஜோதியோட…சாப்பாட்டோட ஐக்கியமாயிடும்.

நீங்க உங்க பரபரப்பிலே mocrowave dish லெ சாப்பாட்டை வெச்சுட்டு வேலைய்யை பார்க்க போயிடுவீங்க… எனகுள்ளேயும் எவ்வளவு பரபரப்பு நடக்குது பாருங்க

பாகம் – 3 . . .

Microwave ன் சுயசரிதை —பாகம் 1

ல்லாருக்கும் வணக்கம்..நான் தான் மைக்றோவேவ் ஓவென் பேசறேன்…நான் உங்களுக்கு புதுமுகம் இல்லைன்னு நினைக்கரேன்.உங்கள் வீட்டிலே என்னை ஒரு உயர்வான் இடத்திலெ தான் என்னை வைச்சு எனக்கு ஒரு கௌரவத்தை தந்திருக்கீங்க…(அட..தறையிலே வைக்கமுடியாதில்லே..கிச்சன் slab மேலே தானே வைச்சிருக்கீங்க..)..இங்கே நான் என்னோட சுயசரிதைய்யை சொல்லப்போறேன்…என்னமோ உங்க கிட்டேயெல்லாம்.. நான் பிறந்த்தது – வளர்ந்த்து – என் வியாபார வளர்ச்சியெல்லாம் பகிர்ந்துக்கணும்ன்னு ஒரு ஆசை…

கணுபிடித்த வருடம் :1945
கண்டுபிடித்தவர் :Percy Spencer
கண்டுபிடிப்பு :- ஒரு விபத்து

Raytheon கம்பேனிய்யை சேர்ந்த Precy spencer தீவிரமாக் magnetron ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்…


ஆரம்ப காலம் :-
செரியான நேரத்திர்க்கு சாப்பிடமுடியாமல் போகும்ன்னு பாக்கெட்டில் சாக்லேட் (Candy Bar) வைத்திருப்பார். ஒருநாள் ஆராய்ச்சியின் முடிவில்..ஏதாவது கொறிக்கலாம்ன்னு இருந்தப்போ.. பாக்கேட்டில் இருக்கும் சாக்லேட் நினைவுக்கு வர…பாக்கெட்டில் கைய்யை விட்டா…கையெல்லாம் ஒரே பிசக்-பிசக்ன்னு ஒட்டுது..என்னனு பார்த்தா..சாக்லேட் உருகிப்போய்…சூப்பாயிடுச்சு

ஒருவேளை இது நம்ம magnetron ஆரய்ச்சியில் இருக்கிற நுண்ணலைகள் (microwaves) காரண்மாக இருக்குமோன்னு சின்னதா ஒரு போரி தட்டினாலும்..அதை ஊர்சித படுத்த் என்னொரு சோதனை செய்தார்..சோதனை பொருள் :- Popcorn kernels…அத்தோட நிருத்தாம்..தோஸ்த் (அவர் பேர் கிடைக்கலை..தெரிஞ்சவங்க சொல்லுங்க..சேத்துக்கரேன் ) கிட்டே இதைபத்தி சொல்லி..ரெண்டு பேரும் ஒரு முட்டைய்யை வச்சு..அது வேகுமா..வேகாதான்னு வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே இருந்தாங்க…

முட்டை கொஞ்ச நேரத்திலே கிடு-கிடுன்னு ஆட ஆரம்பிச்சுது…கிட்ட-தட்ட “முட்டைக்கு’ள் பூகம்பம்” ன்னு சொல்லலாம் இன்னும் கொஞ்சம் நல்லா பாக்கலாம் ன்னு தோஸ்த் கிட்டே போனார்…முட்டைகுள்ளே வெப்பத்தின் காரண்மாக அழுத்தம் ஜாஸ்தியாய்…முட்டை வெடிச்சுடுத்து

ஆதிகாலங்களில் நாங்கள்:-
என் மூதாதைய்யர் 6 அடி உயரமும் 340kg எடை கொண்டவர்..அவருடைய தீனி – 3000 watts – நுண்ணலை சக்தி – என்னைப்போல் உள்ளவர்களின் 3 மட்ங்கு …கொஞ்சம் யோசிச்சு பாருங்க..bedroom – Guest room மாதிரு Microwave room ன்னு கட்டவேண்டியிருக்கும்

அப்பெல்லாம் எங்களை யாரும் microwaveoven ன்னு சொல்லலை..RadarRange ன்னு தான் சொன்னாங்க. இப்போ இருக்கும்போல் எங்களை வடைவமைத்தவர்கள் 1935 ல் Amana Corporation…விலை $495..அப்புறம் படிப்படியா முன்னேரி உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்

பாகம் – 2…

கதை புரிந்ததா?

லைப்பை பார்த்து ஏதோ தத்துவம் சொல்ல பொறேன்னு நினைசுடீங்களா?…அதெல்லாம் இல்லை. சமீபத்துல ஒரு கதை கேட்டேன். உங்கள்ள பலபேருக்கு தெரிஞ்ச கதையாதான் இருக்கும். ஆனாலும் பறவாயில்லை இன்னொரு முறை படிங்க.

முன்ரொரு காலத்தில் வயது-முதிற்ந்த குரு ஒருவர் தன் சிஶ்யனுடன் ஊர்-விட்டு ஊர் பொய்கொண்டிருந்தார். பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிஶ்யன் தன் சந்தேகங்களை கேட்க்க, குரு தான் அனுபவத்தில் அறிந்த உண்மைகளை பாடமாக பொதித்துவந்தார்.

ப்ரயாணத்தின் ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒரு நதியை வந்தடைந்தார்கள். நதியில் இடுப்பளவு மட்டுமே தண்ணி இருப்பதால் படகுகள் வருவதில்லை என்று தெரிந்துகொண்டார்கள். நடந்தே அக்கரை சேர்ந்துவிடலாம் என்று முற்ப்பட்ட போது அங்கே ஒரு இளம்பெணும் அக்கரை போகும் நோக்கத்தோடு வந்தாள். படகேதும் இல்லாததை கண்டு வருத்தப்பட்டாள்.

அவள் வருத்தத்தின் காரணம் கெட்டதர்கு … தன் தந்தைக்கு உடல்நிலை மிகவும் கவலைக்கடமாக் உள்ளதென்றும் ,.. வைத்தியர் அக்கரையில் வசிப்பவர் என்றும், … தனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக ஜொசியர் சொல்லியிருப்பதன் காரணத்தால் – படகு இல்லமல் தன்னால் அக்கரை போக முடியாததை நினைத்து விம்மியதாக கூறினாள்.

அந்த பெண்ணின் இயலாமைய்யும் அவசர நிலையும் உணர்ந்த சிஶ்யன் ..அவளை தன் தோளில் சுமந்து அக்கரை சேர்த்துவிட முன்வந்து சம்மதம் கேட்டான்..அவளும் தன் தந்தையை நினைத்து “ஆபத்துக்கு பாவம் இல்லை” என்று சம்மதித்தாள். இப்படி மூவரும் அக்கரையை வந்தடைதார்கள்.ஆந்த பண் குருவை வணங்கி சிஶ்யனுக்கு நன்றி சொல்லி வைத்தியர் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். குருவும் சிஶ்யனும் தங்கள் ப்ரயாணத்தை தொடர்ந்தனர்.

குருவின் முகத்தில் ஏதோ ஒரு சஞ்சலம். சிஶ்யனின் வினாக்களுக்கு பட்டும் படாமலும் விடை அளித்தார், காரணமில்லாமல் கோபித்தார். சிஶ்யனால் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஒரு ஆசார்யனாக வரவேண்டும் என்பதற்க்காக் குருகுலத்தில் படிக்கும் தான், அந்த பெண்ணை தொளில் சுமந்து வந்தது தான் குருநாதனின் கொபதிற்க்கு காரணம் என்று அறிந்தான்.

அவன் சொன்னான் ” குருவே அந்த பெண்ணை நான் நதி கரையிலெயே இறக்கிவிட்டேன் … நீங்கள் ஏன் சுமக்கிரீர்கள்….?”


இந்த கதைய கேட்டு நான் என்ன புரிஞிகிட்டேன்ன்னு.. என் அடுத்த பதிவுல சொல்லறேன்.
நீங்க என்ன புரிஞிகிடீங்கன்னு சொல்ல விருப்பபட்டா.. கண்டிப்பா comments-ல சொல்லுங்க