Microwave ன் சுயசரிதை – பாகம் -5 (முற்றும் )

நாம பழக ஆரம்பிச்சு கிட்டதட்ட ஒரு மாதம் ஆகுதில்லே.. நாள் போனதே தெரியலை..அவ்வளவு ஸ்வாரஸ்யமா இருந்துது..உங்களை முதல் முறையா என் கதை சொல்ல சந்திச்ச போது இருந்த நினைவுகள் இன்னும் பசுமையா இருக்கு. இது தான் என் கதையின் கடைசி கட்டம் .. என்னை வாங்குவது ஒன்னும் இந்த காலத்திலே செப்பிடிவித்தை இல்லை…ஆனால் நம்ம ரெண்டுபேருக்கும் ஒரு சுமுகமான நட்பு இருக்க்ணும்னா .. சில பாதுகாப்பு விதிகளை நீங்க தவறாம கடைபிடிக்கனும்

1 . நான் பிரீயா ( காலியா – Empty ) யா இருக்கும் போது க்ண்டிப்பா switch on செய்யக் கூடாது.. சூடாக்க உள்ளெ ஒண்ணுமே இல்லைன்னு நான் ரொம்ப சூடாயிடுவேன்

2 . உருளைக்கிழங்கு மசாலா கறியை என்கிட்டே சமைக்க சொல்லுங்க.. ஒத்துக்கறேன்.. அதுக்கக Microwave-safe கொப்பரையிலே எண்ணை வைச்சு அப்பளம் பொரிச்சு குடுன்னு சொன்னா… தாங்காது சாமி… காரணம்… எண்ணையின் வெப்பத்தை அவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்த முடியாது.. அடுப்பிலேயே கொஞ்ச நேரம் அதிகமா எண்ணைய்யை காயவைச்சு பாருங்க… எண்ணை அப்பிடியே உணர்ச்சிவசப்பட்டு (நேருப்பு பிடிச்சு) பொங்கி எழுந்துடும்… அடுப்புக்கே இந்த கதின்னா நானெல்லாம் எம்மாத்திரம் 🙁

3 . Pace maker உபயொகிப்பவர்கள் தங்களது உபகரணம் நல்ல செயல்பாட்டில் உள்ளதாவென்று உறுதி செய்த பின்ன்ரே என்னை இயக்கலாம்… சந்தேகமான பக்ஷத்தில்… என் கிட்டேயே வரக்கூடாது அல்லது.. வேறு யாரையாவது உபயோகப்படுத்த சொல்லி கேட்க்கலாம்.. காரணம்… என்னுள் இருக்கும் Radiation , Pacemaker ன் செயல்பாட்டுக்கு குறுக்கீடு செய்யலாம்…இது ஆபத்தில்லையா ? ?

4 . குழந்தைகளை கோண்டு என்னை இயக்க சொல்லாதீங்க..அவங்க.. சூப்பர் ஸ்டார் மாதிரி.. நீங்க சொல்லி குடுத்ததையெல்லாம் சரியா செய்வாங்க…சொல்லி கொடுக்காத்ததையும் செய்தே பாத்துடுவாங்க.. எதுக்குங்க வம்பு… அவங்களுக்கு சாதக-பாதகங்கள் புரியும் வயசிலே என்னை இயக்க சொல்லிக் குடுங்க.. பொறுப்பாவும் இருப்பாங்க பாதுகாப்பாகவும் இருக்கும்

5 . நான் சமையலில் பிசியா இருக்கிரப்போ… சரியா சமைக்கறேனான்னு முன்னாடி மூஞ்சிய வைக்கக்கூடாது… இப்பிடி செய்தா அம்மா என்ன பண்ணுவாங்க….( தெரியாதா… அடுத்த முறை அம்மா சமைக்கிறப்போ செய்து பாருங்க… நல்லா அம்மா வாயிலேயிருந்து வாங்கி கட்டிக்குவீங்க \:D/ )

6 . எனக்கு தோழியா ஒரு சமையல் குறிப்பு புத்தகமும் குடுப்பாங்க.. ( என்ன… என்ன்.. .””எங்கேயோ பத்திரமா வச்சிருக்கேன்.. எங்கேன்னு தான் ஞியாபகம் வரலே “” தானே… :-W ) அதிலெ என்னென்ன சமைக்க எவ்வளவு நேரம் வைக்கணும் ன்னு சொல்லியிருக்கும்.. அதெல்லாம் மெனெக்கெட்டு list போட்டு வைக்க அவங்க என்ன கேணப்பசங்களா… சில பதார்த்தங்களை அதிக நேரம் வைச்சா தீஞ்சு போகும்.. ஆப்புறம் .. “”Microwave லெ சமைச்சா என்னமோ தெரியலை… ருசியே சரியில்லை “” ன்னு மட்டும் நாகூசாம சொல்லுவாங்க

7 . பாட்டி விறகடுப்பை சாணகம் போட்டு சுத்தம் செய்வதை பார்த்த ஞியாபகம் இருக்கா.. (அட விறகடுப்பாவது..சாணகமாவது ன்னு தானே சொல்லரீங்க..) அதாவது என்ன சொல்லவறேன்னா..என்னையும் கொஞ்சம் சுத்த-பத்தமா வைய்யுங்க…அப்புறம் கப்பு-நாத்தம்னு மூக்கை பொத்திக்கிட்டீங்கன்னா X(
8 . என் வேலையானதுக்கப்புறம் மறக்காம Main Plug ஐ switch off பண்ணுங்க.. மின்சாரமும் மிச்சமாகும்.. தற்செயலாக வரும் மின்சார கோளாறுகளிலிருந்து என்னை பாதுகாக்கவும் முடியும்

9 . பாதி வேலை செய்யும்போது.. படார்ர்ர் ன்னு கதவை திரக்ககூடாது.. எனக்கு கூச்ச
மா இருக்கும்

10 . எனக்கு எப்பவாது மூட்-அவுட் ஆச்சுன்னா முதலில் Main Switch ஐ OFF பண்ணுங்க.. அப்புறம் .. என் தொழில்னுட்பத்தில் பயிற்ச்சியுள்ள நபரைக் கொண்டு மட்டுமே வைத்தியம் பண்ணுங்க..பிளீஸ்..
அம்புட்டுதேன்…

தமிழ் புத்தாண்டு வருது… எல்லாரும் பத்திரமா இருங்க..

புத்தாண்டு வாழ்துக்கள்

முற்றும்

16 Replies to “Microwave ன் சுயசரிதை – பாகம் -5 (முற்றும் )”

  1. 3.கேள்விப்படாதது.
    9.சில முறை பலர் செய்ய பார்த்திருக்கேன்.

  2. வாங்க குமார்
    3. —வருத்ததுடன் சொல்லவேண்டியிருக்கு.. நிறைய டாக்டர்கள் கூட இந்த விஷயத்திலே அலக்ஷிய்மா இருப்பதை பார்த்திருக்கேன்..கேட்டாக்கூட .. evasive Reply தான் சொல்லறாங்க

    ரெண்டுமே மெஷீன் தான்.. எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது

    pace Maker உள்ளவர்கள் தவிர்கமுடியாத காரணங்களால் Microwave use பண்ணியே தீரணும்ன்னா.. ON பண்ணி அதன் கிட்டே நிற்க வேண்டாம்… Timer இருப்பதால் தனே OFF ஆயிடும்.. Off ஆனதுக்கப்புறம் ஒரு 5 min wait பண்ணி அப்புறமா சாப்பாட்டை எடுக்கலாம்

    9. பெரிசா ஒண்ணும் தீங்கு செய்யாது.. ஆனாலும் Not advisable

  3. அற்புதமான பதிவுத்தொடர்!!
    மேலுமிது போன்ற தொடர்களை எழுத வாழ்த்துக்கள்!!
    நானும் (9.) அவ்வப்போது செய்யும் ஒரு குற்றவாளி!! 🙂

  4. ம்.. எண்ணை ஊத்தி அப்பளம் பொரிக்கமுடியாது.. ஆனா வெறும் அப்பளத்தை ஒரு 1/2 நிமிடம் முதல் ஒரு நிமிடம் வரை மைக்ரோவேவில் வச்சு எடுத்தால் எண்ணையில்லாத ஆரோக்கியமான அப்பளம் சாப்பிடலாமே? நான் இப்பல்லாம் எண்ணையில் அப்பளம் பொரிக்கிறதே இல்ல. முழுக்க முழுக்க மைக்ரோவேவ் அப்பளம் தான்!

    நல்ல தொடர்.. வாழ்த்துக்கள் தீபா!

    அடுத்து எதைப் பத்தி தொடர்? 😉

  5. வாங்க CVR
    கொஞ்சம் டெக்கினிகலா பிசி..அதான் பதில் போட தாமதம் .. மன்னிக்கணும்..

    உங்க ஊக்கத்திர்க்கு ரொம்ப நன்றி..
    எதை எழுதினாலும் controversy யாகுது.. அதுக்கு தான் இந்த மாதிரி பதிவுகள் போடறேன்

  6. வாங்க சேது

    எண்ணை குறைச்சு உபயோகிப்பது நல்லது தான் ஆனால்.. நம்ம உடலுக்கு தேவயானையும் விட குறைவா இருந்தா… தப்பில்லே… கவனமா இருங்க்..

    Health conscious நல்லது..
    Health Freak ரொம்ப தப்பு

  7. Your contribution on Microwave is superb/informative and instructive narrated in a humourous style. Congrats.
    Can u pl.clarify why, whenever we restart the oven immediately the rotation also changes?

  8. TN..வாங்க
    Honestly.. i dont know and i could not find an answer to this,
    My guess is..
    each time the MO is stopped/ paused there might be small lever-like-thinggy which falls into a certain slot..
    …which inturn decides the colckwise-anticlockwise dorection of the turn table

  9. அழகா, அருமையா இருக்கு. இதை ஒரு மென்நூல் மாதிரி இணைச்சாக்க நல்லா இருக்கும்.

  10. வாங்க பத்மா..
    முதல் முறையா வந்திருக்கீங்க.. பொறுமையா மற்ற பதிவையும் படிச்சு உங்க கருத்தை மறாக்காம சொல்லுங்க
    ////இதை ஒரு மென்நூல் மாதிரி ///
    எப்படி ? ?.. அதுக்கு என்ன பண்ணனும் ?

  11. எல்லா பதிவுகளையும் pdf கோப்பா ஒன்னா மாத்தி தரலாம். கண்னபிரான் ரவி தன்னோட சில தொடரை அந்த மாதிரி தந்திருக்கிறார்.

  12. பத்மா..
    இப்படி இரு தகவல் தந்ததுக்கு ரொம்ப நன்றி.. கண்டிப்பா விரைவில் செய்யறேன்

  13. மேடம் எங்கயோ போய்ட்டிங்க நல்லாயிருக்குது

  14. வாங்க வடிவேலன்…
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *