Virtual Assistant (பாகம் 5) – VA வலைத்தளங்கள்

பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2
ரி, அடுத்த பாடத்துக்கு போகிரதுக்கு முன்னாடி யாரெல்லாம் home work பண்ணலையோ.. அவங்கெல்லாம் பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க.
“மிஸ், நான் ஆப்ஸண்ட்.. இன்னிக்கி தான் வந்தேன்னு” உதாரெல்லாம் விட முடியாது..

அடேங்கப்பா… யாருமே பண்ணலை போல இருக்கே…home Work குடுத்தத்தை கண்டிப்பா எல்லாரும் படிச்சிருப்பீங்க.. சொன்ன home work ஐ முயர்ச்சி பண்ணியிருக்க மாட்டீங்கன்னு தான் என் யூகம். இது உங்க மேலே இருக்கும் அவனம்பிக்கையிலே சொல்லலை… உங்களுடைய apprehensions ஐ புரிஞ்சுகிட்டத்திலே சொல்லறேன்.

அடுத்தவங்க எப்படி அவங்க Profile ஐ அமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா , எனக்கும் எப்படி VA Profile எழுதணும்ன்னு ஒரு ஐடியா கிடைக்கும்ன்னு தானே எல்லாரும் சொல்ல வறீங்க… அதுக்கு தான் இந்த பதிவு. கூடவே எந்த எந்த தளங்களில் Virtual Assistants ஐ தேடலாம் / கண்டுபிடிக்கலாம்ங்கிரதும் இந்த பதிவிலே சொல்லப்போறேன்.

சில பிரபலமான Virtual Assistance தளங்களில் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். தனி நபராக அறிமுகப்படுத்தி கொண்டால் Independent Contractor என்றும், குழுவாக அறிமுகப்படுத்திக்கொண்டால் Affiliate எண்றும் குறிப்பிடப்படும்… ( இப்போதேக்கு தனி நபராக அறிமுகப்படுத்துவது பற்றி தான் சொல்லியிருக்கேன்… குழு சார்ந்த விவரங்கள் பின் வரும் பதிவுகளில் சொல்லறேன்… ரெண்டையும் போட்டு கண்ப்யூஸ் பண்ணவேண்டாம்)

Virtual Assistants ஐ Service Provider, Provider, freelancer, coder ன்னும் சொல்லுவாங்க. இது வலைத்தளம் – டு- வலைத்தளம் மாறுபடும்.(இன்னேரம் புரிஞ்சிருக்கும்.. இது வேலைக்கு விண்ணப்பம் குடுப்பவர்களை குறிக்கும்)

ஆதே மாதிரி… வேலை இருக்கு—விண்ணப்பங்கள் போடலாம் ன்னு சொல்லரவங்களை …. Buyers, (அதாவது service buyers), Company, (தனி நபருக்கும் குழுவிர்க்கும் பொருந்தும்)ன்னு சொல்லுவாங்க.

ஸோ.. Virtual Assistance க்கான வலைத்தளங்களில் பட்டியல் கீழே. இன்னிக்கி சும்மா போய் பார்த்துட்டு வாங்க. அப்படியே அங்கே இருக்கும்போது… Providers அவங்க profile ஐ எப்படி அமைச்சிருக்காங்க என்பதையும் பாருங்க. வலைத்தளாம் – டு- வலைத்தளம் Provider – template மாறுபடும்… ஆனால் content எல்லாம் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஏதாவது provider சோந்த இணையத்தளத்தின் முகவரி குடுத்திருந்தால்.. அதையும் போய் பாருங்க… VA Profile ன் structure & content ஐ ஒவ்வொருத்தர் எப்படி அமைச்சிருக்காங்க என்பதை கூர்ந்து கவனிச்சு பாருங்க. இதிலிருந்து நீங்களே உங்களுடைய பிரத்தியேக ஸ்டைல் டெவெலப் பண்ணலாம்

சில Virtual Assistance வலைத்தளங்கள்.

( தொடரும்… )
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

6 Replies to “Virtual Assistant (பாகம் 5) – VA வலைத்தளங்கள்”

  1. \\அடேங்கப்பா… யாருமே பண்ணலை போல இருக்கே…home Work குடுத்தத்தை கண்டிப்பா எல்லாரும் படிச்சிருப்பீங்க.. சொன்ன home work ஐ முயர்ச்சி பண்ணியிருக்க மாட்டீங்கன்னு தான் என் யூகம். இது உங்க மேலே இருக்கும் அவனம்பிக்கையிலே சொல்லலை… உங்களுடைய apprehensions ஐ புரிஞ்சுகிட்டத்திலே சொல்லறேன்.
    \\

    டீச்சர் இன்னா இப்படி தான் இருக்கனும் :))

    சில லிங்குகள் சரியாக வேலை செய்யவில்லை.

  2. 🙂 கோபிநாத்.

    லின்க்ஸ் சரி பண்ணியாச்சு.. டாங்க்ஸ்.. குட் பாய் !!

  3. இப்பதான் ஒரு மாதிரி முடிவுக்கு வரமுடிந்தது அதற்குள் Home Work எல்லாம் கேட்டால் எப்படி?? 🙂
    அருமையான விவரங்கள்.

  4. வணக்கம் குமார்
    நன்றி.
    nothing suceeds like sucess ங்கிறது ஒவ்வொரு கட்டத்திலேயும் சரியா தான் இருக்கு
    “ஜாக்கிரதையா இரு, யாராச்சும் ஏமாத்திடப்போறாங்க
    சரியா காசு குடுப்பாங்களா.. உன்னோட காச புடிங்கிக்கபோறாங்க ”
    இப்படியெல்லாம் skeptic ஆ பேசி பயமுடித்தின சொந்தக்காரங்க கூட
    ” இது என்ன வேலை, விவரமா சொல்லு ” ன்னு open Mind லே கேக்கறாங்க
    இந்த மாற்றம் விட்டிலேயிருந்து சமுதாயத்துக்கு வரதுக்கு அதிகம் நாட்கள் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *