கோடை விடுமுறைக்கு எங்களுக்கு லீவு கிடைக்குமா..?..?

Summer vacation க்கு இந்த வாட்டி ஏதாவது hill-station போயே தீரணும்ன்னு வீட்டுலெ ஒரே கலாட்டா.. எப்பவும் போல.. பெரியம்மா வீடு..சித்தப்பாவோட அத்தை பைய்யன் வீடு..அப்பிடி-இப்படின்னு சாக்கு-போக்கு சொன்னா நடக்காது, நாங்க சும்மா இருக்கமாட்டோம்…( பெரிய லெவெல்லெ.. பாட்டி-தாத்தாவை கூட்டு சேர்த்து மெரட்டல்)…அடுத்த வருஷம் hill-station போலாம்……அடுத்த வருஷம் hill-station போலாம்ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லி யேமாத்துகிர வேலையெல்லாம் இனிமே நடக்காது ன்னு பசங்கயெல்லாம்..விடுமுறையில்-வெளியூர்-மட்டுமே போராட்டம் , சத்யாகிரகம் , அழுது-அழிச்சாட்டியம் பண்ணி…

இது எதுவுமே வேலைக்காவலைன்னு கடைசியா ஒரு பிரம்மாஸ்த்திரம் விட்டாங்க பாருங்க…அதுல தான் நாங்க ரெண்டு பேரும் ஆடிப்போயிட்லோம்.. “Annual-Exams வருது.. நீங்க பிராமிச் பண்ணினாத்தான்..நாங்க படிப்போம்…இல்லைன்னா…படிக்காமேயே எக்ஸாமுக்கு போவோம்..”….சும்மா மெரெட்டலுக்கு சொன்னாங்களொ… நிஜமாவே சொன்னாங்களோ…எங்களுக்கு ஸப்த நாடியும் அடங்கி போச்சு..:(

ஒருவழியா..பேச்சுவார்த்தையெல்லாம் முடிஞ்சு..ஒரு பரஸ்பர தீர்மானத்திக்கு வந்தோம்..அதாவது நாங்க்ள் லீவு-சேமிப்பு-திட்டத்தை அடுத்த 2-3 மாதாத்திர்க்கு செயல்படுத்த மாட்டோம் AND உண்மையாவே லீவுக்கு அப்பிளை பண்ணி அதுக்கு தேவைவான நடவடிக்கையிலே தீவிரமா செயல்படுவோம் ன்னு ரெண்டு பேர் கிட்டேயும்..பாண்ட் பேப்பர்லெ எழுதாத்த குறையா வாக்குறுதி குடுத்திருக்கோம்…சாட்சியோட (வேறெ யாரு…தாத்தா – பாட்டி தான்)..

அப்புறம் வீட்டை பார்க்கணுமே.. இந்த பூனையா..பால் பாத்திரத்தை உருட்டி விட்டுதுன்னு… நாங்க சொல்லாமலே..நேரதுக்கு படிக்கிறதும்…பாட்டி Serial பாக்கும்போது.. பொறுப்பா.. ரூமுக்கு போய் கதவை சாத்தி ஜோரா படிக்கிரதும் (அதாவது சும்மா கதவை சாத்தி பாவ்லா காட்டலை..படிக்கத்தான் சிய்றோம்ன்னு)…தட்டுலெ போட்டதை..குத்தம்-குறை சொல்லாம சாப்பிடறதும்…அட..அட..நடந்ததெலாம் கனவா..நினைவா ன்னு நாங்க பிரமிச்சு போயிட்டோம்…

Then Reality hit us hard :-s

ஒரு நாள் – ரெண்டு நாள் லீவு எடுக்கவே இங்கே மூக்காலே அழவேண்டியிருக்கு…ரெண்டு பேருக்கும் சேர்ந்தாப்பல் லீவு sanction ஆச்சுன்னா..ஆபீஸ்லெயிருந்து வறப்போ பிள்ளையாருக்கு ஒரு சலாம் போட்டு 11-தேங்காயும் வடல்போட்டுத்தான் வீட்டுக்கே வருவோம்..(நாம கேட்ட வரத்தை ஜின் குடுத்திரிச்சில்லே)..இந்த லக்ஷணத்திலெ 15 நாள் லீவுக்கு அப்பிளிக்கேஷன் போடவே பக்கு-பக்குன்னு இருக்கு… காலேஜ் viva-voce எக்ஸாமுக்கு கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லே…ஹம்ம்

லீவுக்கு அப்ப்ளை பண்ணரதுக்கு முன்னாடி.. இதுவரை ஓ.பி அடிச்ச வேலையெலாம்..சட்டு-புட்டுன்னு முடிச்சு..நல்ல மூட்லெ இருக்கிரப்போ பார்த்து…ஆபீசுக்காக இதுவரை நான் எப்பெலாம் லீவெடுக்கலைன்னு பட்டியல் போட்டு ஞாபகபடுத்தி…(without sounding too obvious)..பிள்ளைகளுடன்..quality-time செலவிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு …இன்னும் ஒண்ணும் சொல்லலை….. இனிமே தான் இதெல்லாம் ஆபீஸ்லெ சொல்லி லீவு வாங்கணும்ன்னு… நாங்க ரெண்டுபேரும்.. ஒரு strategic planning பண்ணியிருக்கேம்…எவ்வளவு தூரம் வெற்றியடையறோம்ன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்..:-W

5 Replies to “கோடை விடுமுறைக்கு எங்களுக்கு லீவு கிடைக்குமா..?..?”

  1. திட்டம் வெற்றிபெற்று விடுமுறை கிடைத்து மகிழ்ச்சியா இருக்க
    all the best.

  2. விடுப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.
    ஜாலியாக கொண்டாடுங்கள்.

  3. வாங்க குமார் & CVR
    நானும் அப்படி தான் நம்பறேன்.. விடுப்பு கிடைச்சதும்..கண்டிப்பா..ஒரு update இருக்கும் 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *