உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்

சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
நம்மில் எத்தனை பேருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று எனக்குத் தெரியாது, ஆனால், எல்லோருக்குமே (கடவுளின்) படைப்பின் மீது நம்பிக்கை உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். கதை, கவிதை, ஓவியம், நாடகம் போன்ற, மனிதர்கள் “படைக்கும்” விஷயங்களில், படைப்பு உருவாகுவதற்கு காரணமாய் இருக்கும் ஆரம்ப நிலையை Conception அதாவது கருக்கொள்ளுதல் என்று சொல்லுவோம். ஏன் தெரியுமா? கருக்கொள்ளுதல் என்பது (கடவுளின்) படைப்பின் ஆரம்ப நிலை. இந்த நிலை இல்லையென்றால் நீங்கள் இல்லை – நான் இல்லை – பிறகு என்ன இருந்தால் நமக்கென்ன?
சிசுவின் பிறப்பு என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
கருவின் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குவது இந்த stem cells தான். இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி “நாம்” உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே “சரியாகிறது”. சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் “ஒட்டிக்கொள்கிறது”.
ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு. (..Bone marrow வில் தான் Stem cells உற்பத்தியாகின்றன .. என்று சொன்னேனே.. நினைவிருக்கிறதா !!)
எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் (..அறுவை சிகிச்சை என்றாலே பலர் ஒதுங்கி விடுவார்கள்). இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.
சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.
Ø இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)
Ø தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogenic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
Ø இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்
இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, Osteoarthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.
சில Bone marrow donor’s இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.
ரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.
ü Private Cord Blood Bank :- கட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.
ü Public Cord Blood Bank :- இங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
உலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.

புத்தகத்தைப் படிப்பது மட்டும்தான் கல்வியா ?

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது போல், புத்தகங்களை படித்ததால் மட்டுமே ஒருவர் அறிவாளி ஆகிவிடமுடியாது. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படித்ததால் மட்டும் ” கல்வி ” பெற்று விட முடியாது. ” I have never let my schooling interfere with my education.” என்று Mark Twain சொன்னது எவ்வளவு பேருக்கு தெரியும். அப்படியே தெரிந்தாலும் நினைவில் வைத்திருப்பார்களா?. அனுபவங்களை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் சரி பார்க்கும் பட்டியல்)Check list) தான் படிப்பு. குறிப்பிட்ட அனுபவத்தின் முடிவில் மனதில் எழும் கேள்விகளும், அதற்காக பதிலை தேடும் முயற்சியும் தான் நிரந்தமான கல்வி என்பது என் கருத்து.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் “Practical Class” என்றொரு வகுப்பு உண்டு. அதாவது புத்தகத்தில் படித்ததை நடைமுறையில் செயல்படுத்தி பார்ப்பது. உதா: ஒளி்க்கதிர்கள் நேர்க்கொட்டில் செல்கிறது என்று படித்தால் மட்டும் புரிந்துவிடுமா? .. திரைச் சீலைகள் மூடிய அறையில் Torch அடித்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்குமே! காலப்போக்கில் இந்த “Practical Classes” நடைமுறை கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக ஏட்டுச்சுரைக்காயாய் மாறிப்போனது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக சண்டிகர் நகரத்தில் உள்ள “விவேக் மேல் நிலைப் பள்ளியில்” நடைமுறைக் கல்வியைச் சீராக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு 11 ஆம் வகுப்பைச் சார்ந்த சில மாணவர்களை ஒருங்கிணைத்து 8,000 ரூ. முதலீட்டில் InsPirated என்ற நிறுவனத்தை October 2008 இல் தொடங்கினார்கள். வர்த்தக துறையை (Commerce Dept) சேர்ந்த ஆசிரியர்கள் நிறுவனத்தை எப்படி நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகளையும் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் உள்ளது போல், இங்கும் நிர்வாகிகள் குழு (Board Of Directors), பணியாளர்கள் (Staff Members), கண்காணிப்பாளர் (Supervisor), மேற்பார்வையாளர் (Administrator), பொருளாளர் (Finance manager) என்று எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தை நடத்த தேவையான வேலையாட்களை பள்ளியில் படிக்கும் சக மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்தார்கள். இவர்களுக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட்டது உதா: 1-கிலோ குடமிளகாய் நறுக்க 2ரூ. உணவுப்பொருட்கள் தயாரிப்பது, புத்தங்களுக்கு அட்டை போடுவது (Book Binding), காகிதங்களைப் பயன்படுத்திப் பொருட்களை தயாரிப்பது (Paper products), Chalk தயாரிப்பது என்று பல வேலைகளை செய்தார்கள். பள்ளியில் வகுப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இவர்கள் வந்து “நிறுவனத்தின் வேலைகளை” கவனிப்பார்கள். அதே மாதிரி மாலையில் வகுப்பு முடிந்த பிறகு “நிறுவனத்தின் வேலைகளை” செய்வார்கள். இந்த கூட்டு முயற்சியின் பலனாக பலனாக லாபம் 11 மடங்கு அதிகரித்தாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றன.
இந்த பள்ளிக்கூடத்தில் நடைமுறை கல்வித்திட்டத்தின் கீழ் இம்மாதிரி மாணவர்களால் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. எல்லாமே கார்ப்பரேட் உலகை பிரதிபலிக்கும் விதம், பங்குதார்கள் (Shareholders), பங்காதாயம் (Dividend), சம்பளம் (Salary), ஒப்பந்த்ததில் வேலை செய்பவர்கள் (Contractors), லாப – நஷ்ட கணக்கு (Profit & Loss Accounts), சரக்குகளின் விவரங்கள் (Inventory), விலை விவரங்கள் (Invoice), செயல்பாட்டு அறிக்கை (Performance Reports) என்று எல்லாமே உண்டு. இது இவர்களுக்கு Hands–on–Experience ஐ தருகிறது. சரி, இப்படி மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனங்கள், இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் போழுது என்ன ஆகும்? நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் பணம் யாருக்கு – எப்படி சேரும்?.
குறிப்பிட்ட நிறுவனத்தை ஆரம்பிக்க முன்வரும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவில் (Board Of Directors) இடம் பெறுகிரார்கள். இந்நிறுவனத்தின் பங்குகளை 10ரூ என்ற விலைக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு / அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்கப்படுகிறது. உண்மையான பங்குச்சந்தையில் பங்குகளை allot செய்வதுபோல் தான் இதுவும். நிர்வாகிகள் குழுவில் இருக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வருடம், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு.. அதாவது liquidate செய்து, பணத்தை பங்குதார்களுக்கு முறையே கொடுத்துவிடுவார்கள். இதை பள்ளி கட்டாயப்படுத்துவதில்லை. இம்மாதிரி நிறுவனத்தை ஆரம்பிப்பதும், அதில் பங்குகொள்வதும், பங்குதார் ஆவதும்.. அவரவர் விருப்பம்.
இந்த திட்டத்தை கடந்த 13 வருடங்களாக விவேக் மேல் நிலைப் பள்ளி செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் HSBC மற்றும் KPMG போன்ற நிறுவங்களுக்கு சென்று presenstation கொடுத்துள்ளார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த JA-India (Junior Achievement India) வின் கீழ் அரசு அனுமதி பெற்றுள்ளது.
நம் தாத்தா – பாட்டி காலத்தில் 5 வது வரை படித்திருந்தால் போதுமானது. இங்கே சொல்லி, அங்கே சொல்லி எப்படியோ வேலை கிடைத்துவிடும். அப்பொழுதெல்லாம் “மெட்ரிக் பாஸ்” , அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே அறிவாளி என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நிலவும் காலத்தில் எவ்வளவு படித்தாலும் போதாது. Freshers களிடம் கொஞ்சமும் தயவு இல்லாமல் “அனுபவம் உண்டா” என்று நிர்வாகம் கேட்கிறது.
பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் இந்த JA-India ( Junior Achievement India ) திட்டத்தின் கீழ் .. அவரவர் நாட்டில் எப்படியோ அப்படி .. இம்மாதிரி செயல்களை மேற்கொண்டால், புத்தங்களில் மட்டும் படிப்பை பார்க்காமல், கல்வியின் அனுபவத்தை நன்றே அறிந்துகொள்ளலாமே.

செயற்கை விரலில் USB Drive

“மயூரி” என்று சொல்லும் பொழுது நம் எல்லோருடைய மனதிலும் “சுதா சந்திரன்” தான் சட்டென நினைவுக்கு வருவார். ஒரு திறமை மிக்க நாட்டிய கலைஞர், விபத்துக்குள்ளாகி தனது காலை இழக்க நேரிடுகிறது. பிறகு, ஜெயப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, நாட்டியம் பழகி திறமையை இன்னொரு முறை சமுதாயத்திற்கு நிரூபிக்கிறார். இது தான் ” மயூரியின் கதை”. கதை என்று ஈரெழுத்துக்களிற் சொன்னாலும், இது சுதாவின் வாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 1984 இல் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு தான், நம் சமுதாயத்தில் செயற்கை அங்கங்களைக் குறித்து விழிப்புணர்வு வளரத் தொடங்கியது.
சமுதாயம் ஊனமுற்றவர்களை பாவிகள் போல் பார்ப்பதும், இவர்கள் விதியே என்று மூலையில் முடங்கிக்கிடந்த காலமும் மாறிவிட்டது. எந்தப் பேதமும் இல்லாமல் அவர்கள் எல்லோருடனும், எப்பொழுதும்போல் பழகி வருகிறார்கள். நாமும் அவர்களிடம் வேறு விதமாக ( மனதைப் புண்படுத்தும் விதமாக) பழகுவதில்லை. மக்களிடையே கல்வி அறிவும், தொழில்நுட்பத்தால் இம்மாதிரி நண்பர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்ற புரிதலும் தான் இந்த மாற்றத்திற்குக் காரணம்.
சமுதாய மாற்றங்களும், மருத்துவத்துறையில் நிகழும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருக்க, ஃபின்லாண்டை (Finland) சேர்ந்த ஜெர்ரி ஜலாவா (Jerry Jalava) என்பவர் தனது மருத்துவருடன் கலந்தாலோசித்து (மோதிர) விரலில் USB Drive பொருத்தி உள்ளார். ஒரு நாள் இரவு வேலை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வரும் வழியில், சாலையைக் கடக்க ஓடி வந்த மானோடு மோதிவிட்டார். மோதிய அதிர்ச்சியில் இவரது தோள் பை (Backpack) பைக்கின் அடியில் மாட்டிக்கொண்டது. தோள் பையின் ஒருபக்கம் இவரது இடது தோளிலும், இன்னொரு பக்கம் மோட்டார்சைக்கிளிலும் சிக்கிக்கொண்டது. இதனால் தன்னை முழுவதுமாக மோட்டார்சைக்கிளிலிருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் கிட்டதட்ட 58 மீற்றர்கள் அதே நிலையில் சறுக்கி – உருண்டார்.
பிறகு தன்னை ஒருமாதிரி நிதானப்படுத்திக்கொண்டு புகைபிடிக்க சிகிரட்டை எடுக்க முயன்ற ஜெர்ரிக்கு வித்தியாசமான உணர்வு. விபத்தின் வலி ஒருபுறம், என்ன நடந்தது என்று புரியாத குழப்பம் இன்னொருபக்கம். “என்ன செய்வது என்று புரியாமல், அவ்வழியே வருபவர்களின் கவனத்தை ஈர்க்க சிறிது நேரம் அலறிக்கொண்டே இருந்தேன்” என்று ஜெர்ரி தனது வலைப்பதிவில் சொல்லுகிறார். இவர் அலறுவதைக் கேட்டு கரிசனம் காட்டிய நண்பர் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார்.
விபத்தால் உயிருக்கு எந்தச் சேதாரமும் இல்லை, ஆனால் இடது கையில் மோதிரவிரலில் பாதி சிதைந்துவிட்டது. எப்படி முயற்சித்தாலும் இவ்விரலைச் சரிசெய்ய முடியாது என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். சிதைந்த பாகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று ஜெர்ரியின் சம்மத்துடன் சிதைந்த பாகம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நடந்தது 07.05.2008 இல்.
தான் கணனித்துறையில் தொழிலாற்றுபவர் (Software Developer / Concept Designer) என்று சொன்ன பிறகு சிகிச்சை செய்த மருத்துவர், “அப்படியென்றால் உங்கள் விரலிலேயே “finger drive” (Thumb Drive என்று சொல்ல முடியாதல்லவா) பொருத்திக் கொள்ளுங்களேன் என்று வேடிக்கையாய்ச் சொன்னாராம். விஷயம் வேடிக்கையாய் ஆரம்பித்தாலும் ஜெர்ரி இதைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
எப்படியும் சிதைந்த பாகத்திற்குச் செயற்கை விரலை ஒட்டவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொப்பி மாதிரி பொருந்திக்கொள்ளுவது போல வடிவமைக்கப்பட்ட செயற்கை விரல்தான் சரியாக இருக்கும்.(.. அதாவது.. பட்டம் விடும் பொழுது நூல் – மாஞ்சா விரலை வெட்டாமல் இருக்க ரப்பராலான விரலை பொருத்திக்கொள்வோமே.. அது போல). வேடிக்கையாய் ஆரம்பித்த யோசனைக்கு வடிவம் குடுத்திருக்கிறார் ஜெர்ரி. இப்பொழுது, USB Flash Drive பொருத்திய விரலுடன் வலம் வருகிறார்.
இதில் Micro SD card மூலம் இவர் தேவையான கோப்புகளைச் சேமித்துக்கொள்கிறார். தற்பொழுது Billix , CouchDBX மற்றும் Ajatus அதில் நிறுவியிருக்கிறார். ” இந்த செயற்கை விரல் நிரந்தரமாக என் கையில் ஒட்டப்படவில்லை. நான் எப்பொழுது வேண்டுமானாலும் இதைக் கழற்றி வைக்க முடியும். என் Flash Drive ஐப் பயன்படுத்தும் பொழுது, அதை விரலிலிருந்து கழற்றி, கணனி / மடிக்கணனியில் மாட்டிவிடுவேன். வேலை முடிந்த பிறகு எடுத்து விரலில் மாட்டிக்கொள்வேன்” என்று ஜெர்ரி சொலுகிறார்.
விரல் துண்டிக்கப்பட்டது சங்கடமான நிகழ்வுதான் என்றாலும், அதையும் ஒரு நல்ல வாய்ப்பெனக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் ஜெர்ரி. Oppurtunity At The Face Of Adversity என்பதை இவருடைய finger – drive என்றும் நமக்கு நினைவுபடுத்தும்.

முக்கியத்துவம் வாய்ந்த "முக்கியமற்ற தகவல்கள் "

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தமது நகைகள், முக்கியமான பத்திரங்கள் போன்றவைகளை வீடுகளில் வைப்பதில்லை. வங்கியில் பொருட்களைப் பாதுகாக்க பிரத்தியேகமாய் ஒதுக்கப்பட்ட பெட்டியில்தான் (Bank Locker) இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். இந்த பெட்டியின் ஒரு சாவி உங்களிடமும், மற்றொரு சாவி வங்கி அதிகாரியிடமும் இருக்கும். இப்பெட்டியை திறக்கவேண்டும் என்றால், இரெண்டு சாவியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இவ்விதம் இரண்டு சாவிகள் இருப்பதும், இருவரின் முன்னிலையில் மட்டுமே அப்பெட்டியை திறக்க முடியும் என்பதே இதன் பாதுகாப்பு முறை.
ஆய்வுகளின்படி இணையத்தில் அதிகமாக பார்வையிடப்படும் தளம் ஒருவரது மின் அஞ்சல்களை பார்க்கச்செய்யும் தளமுவரியே என்று தெரியவந்துள்ளன ( உதா: mail.yahoo.com , hotmail.com, gmail.com, aol.com போன்றவை). இணையதள பயணர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதே இதன் முக்கிய காரணம். அடுத்தபடியாக அதிகம் பார்வையிடப்பட்டும் / பயன்பாட்டில் இருக்கும் முகவரி “Forgot Password” என்று உள்ள “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்பதாகும். இது மின் அஞ்சல் தளங்களுக்கு மட்டும் அல்ல, Internet Banking தளங்களுக்கும் பொருந்தும்.
வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டக்கத்திற்கும், சற்றுமுன் சொன்ன ஆய்வுகளுக்கும் என்ன சம்பந்தம்?. உங்கள் பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியை ஊரார் பார்வையில் படும்படி சாவிக்கொத்தில் தொங்க விடுவீர்களா?, மாட்டீர்கள் தானே !. அதேபோல் உங்கள் கடவுச்சொல்லையும் யாருடனும் பகிர்ந்துக்கொள்ள முன்வரமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வங்கிப் பெட்டகத்தின் சாவியை சோப்பில் (soap) பிரதி எடுப்பது போல், உங்களிடம் பேச்சுக் குடுக்கும் சாக்கில், சதாரணமாய் தோன்றும் விவரங்களை சேகரித்து உங்களது கடவுச்சொல் இல்லாமலே உங்கள் பயணர் கணக்கை ஊடுருவுபவர்களும் உண்டு.
பேச்சுவாக்கில் உங்களிடம் கேட்க்கப்படும் முக்கியமான கேள்விகள்.

  1. என்னை எங்கள் வீட்டில் ராகவன் என்பதை செல்லமா Rocks ன்னு சொல்லுவாங்க.. உங்களுக்கு என்னங்க செல்லப்பேரு. சும்மா ஜாலியா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.
  2. காதல் / பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?.. முதன் முதலில் அவரை எங்கு சந்தித்தீர்கள்?
  3. இன்று எனக்கு பிறந்த நாள் (நாமும் வாழ்த்து செய்தி அனுப்புவோம்), உங்க பிறந்த நாள் எப்பங்க?
  4. பல நாட்களாய் இணையத்திலே பேசுகிறோமே.. இது 9834585234 என் தொலைப்பேசி எண், உங்களுடையதை நானும் பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
  5. இந்த முகவரியில் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய? இதல்லாமல் வேறு முகவரி வைத்திருக்கிறீகளா?
  6. கலிபோர்னியாவுக்கு வந்து 10 வருடமானாலும், எனக்கு இன்னமும் ஆட்டோகிராப் படத்தில் வரும் முதல் பள்ளிக்கூடம் நினைவில் இருக்கு. உங்களுடைய ஆரம்பப் பள்ளிக்கூடம் எங்க, கிராமத்திலேயா?
  7. எனக்கு நீல நிறம்ன்னா ரொம்பவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தமான நிறம் எது?
  8. பூனை / நாய் / கிளி வளர்க்கிறீங்களா.. என்ன பெயர்?

இம்மாதிரி அல்லது இது போன்ற கேள்விகளை கடைசியாக இணையத்தில் எங்கு பார்த்தீர்கள் என்ற நினைவு இருக்கிறதா? இதே கேள்விகளை சற்று மாற்றியமைத்து சொல்கிறேன், நினைவுக்கு வருகிறதா பாருங்கள்

  1. Your favourite Nick Name.
  2. Where did you first meet your spouse
  3. Your Date of Birth
  4. Last four digits of your Telephone number
  5. Your alternate email id.
  6. Your first school / teacher’s name / best friend’s name
  7. Your favourite Color
  8. Name of your pet

இவை அனைத்தும் “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்ற சுட்டியை பயன்படுத்தும்போது, இதிலிருந்து ஏதேனும் ஒன்று உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். பயணர் கணக்கு துவங்கும் போது அக்கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலும், இப்பொழுது கொடுக்கும் பதிலும் ஒன்றாக இருந்தால், உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க அனுமதி தரப்படும். அதாவது, நேரடியாக உங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தாமலேயே உங்கள் பயணர்கணக்குகளை இம்மாதிரி களவாளப்படும் அபாயம் உண்டு.
அறிமுகம் கிடைத்த நண்பரைக் குறித்து தெரிந்துக்கொள்ள எல்லொருக்கும் ஆர்வம் இருக்குமே!. இதெல்லாம் சராசரியாக எல்லாரும் கேட்கும் கேள்விகள் தானே, இப்படி கேட்பது எப்படி தவறாகும்?. இம்மாதிரி கேட்பவர்களை எப்படி தவறானவர்கள் என்று நினைக்கலாம்? யதார்த்தமாய் கேட்கப்படும் கேள்விகளுக்கு இம்மாதிரி உள்குத்து வைத்து பார்ப்பது தவறல்லவா?.. என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். நியாயமான பேச்சு!, நம்பிக்கையை நிலைநிறுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி!, தவறேதும் இல்லை.
ஆனால் சற்று யோசித்து செயல்படுங்கள் என்பதே என் கருத்து. சில நேரங்களில் நீங்களே உங்கள் கடவுசொல்லை மறக்கும் வாய்ப்பு உண்டு. ஞாபகமறதி என்பது 6 – 60 வரை எல்லோருக்கும் வரும். அம்மாதிரி சந்தர்பங்களில், எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும் விஷய்ங்களை இம்மாதிரி இலகுவான கேள்விகள் மூலமாக பதித்து, கடவுச்சொல்லை மாற்றி அமைப்பதற்கு பயன்படுத்தலாம். எச்சரிக்கை என்பது இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது, கடவுசொல் – பக்கத்தில் பதிந்திருக்கும் பதிலை சொல்லாமல், மாற்றி சொல்லுங்கள் என்று தான்.
உதா: கடவுசொல் பக்கத்தில், ஆரம்ப பள்ளியின் பெயர் என்ற இடத்தில் முதலாம் வகுப்பு படித்த பள்ளியை குறிப்பிட்டிருந்தால், நண்பர்கள் கேட்கும் பொழுது பத்தாவது படித்த பள்ளியின் பெயர் சொல்லாமே.
Better Safe Than Sorry / கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வதைப்போல், தகவல்கள் திருட்டுப்போன பிறகு அடித்துக்கொள்வதை விட, எச்சரிக்கையாக இருப்பது தானே புத்திசாலித்தனம்.

About Me

V A – Profile
You might be expecting carefully drafted profile content here. I have to admit, there is nothing of that sort. I am going to tell you about my skills, just as they are, and if you find them suited to your needs, I am just a click away.
Best case scenario: – We become business associates
Less best case scenario: – We can be good pals ( like the one we bump into every morning at the local coffee shop.)
Either case, it makes me happy to know about you.
My Academics:-
I hold a Life science post graduate degree from the MS University at Baroda, Gujarat, India. APTECH introduced me to computers & software through their Higher Diploma in Software Engineering programme.
I am Good at:-

Blogging
I am an avid blogger, Blogging since June 2006. Take at look at some of my personal blogs while you are sipping coffee. Note that none of my blogs have Google ads, and my blogs donot generate any revenue. I try to update them as an when I get a break from my Virtual Assistance Routine. These are for light reading only.

  1. Horizon within us
  2. Appreciating poetry
  3. Documenting Inspirations
  4. Some Template Tips
  5. தொடுவானம் நம் உள்ளத்தில் ,Tamil Blog (Tamil is the language spoken in the Tamil-Nadu state of southern India.). . . and of course
  6. Deepa’s ( This blog)

Update on : 10 Oct 2010 : The contents of the above 6 blogs have been officially consolidated under this url.– http://demo.cbatechnologies.in/homepreneur–
Zoho Creator Applications :-
I can create custom web applications in Zoho-Creator that allows you collect and process data tailor made to suit your needs . Let me know you requirement, I shall have a demo for you ( No, I do not charge for the demo.) . However the completed zoho product will include user manual and a how to kit , and this one is not free (Hey ! Zoho is indeed a free product, but my services come for a fair price). I know I can do it for you, because , I use zoho myself to keep track of projects and other things with my clients.
So, Feel free to tell me whats on your mind.

New

New …. by Priya

New dawn stirs us
     from yesterday’s slumber
New song fills us
     with hopes for yonder
Now, the time to reminiscent
     events sweet and sour
Now, this time to make right
     things we missed on hindsight
New dawn stirs us
     from yesterday’s slumber
New song fills us
     with hopes for yonder

Stars

Stars… by Priya

Budding blossom
……………..rests within,
Blooming into life
……………. on a glance,
Brimming with beauty,
……………..from within
Blissfully resting under
……………..the shining stars.

Billion beats – Shri.Dr.A.P.J.Kalam ன் கனவு உங்கள் கணினியில்

ரசியல்ன்னாலே ஒதுங்கி போகிறவங்க தான் நம்மிடையே அதிகம் இருக்காங்க… நான் சொல்லரது.. சாதாரண பொதுமக்கள்ஸ்… அரசியல நாட்டம் உள்ளவர்களை அவதூறாக பேசறேன்னு தயவுசெய்து நினைக்காதீங்க.. ஏன்னா… இது ஒரு அரசியல் பதிவு கிடையாது.. அரசியல் சார்ந்த பதிவும் கிடையாது.. ஸோ… “நீயா- நானா… ஒரு கை பார்த்துடலாம் “…ன்னு வரும் வாசகர்களே… இங்கே உங்களுக்கு தீனீ இல்லை… ஸொ.. டாடா.. பை பை

ஆங்.. விஷயத்துக்கு வருவோம்.. நான் என்ன சொல்லிகிட்டிருந்தேன்… ஆ.. ஞாயாபகம் வந்திடுச்சு.. அரசியல்ன்னாலே ஒதுங்கி போகிரவங்க தான் நம்மிடையே அதிகம் இருக்காங்க…இதுக்கு பல காரணம் சொலலாம்.( என்னனு சொன்னா கலவரம் வந்துடும்..). இந்த மாதிரி ஒரு தருணத்தில் தான் திரு.A.P.J.Abdul Kalam நமது 11th குடியரசு தலைவராக நமக்கெல்லாம் July 25, 2002ல் அறிமுகமானார். இதுக்கு முன்னே விஞ்யான துறையை சார்ந்தவர்களுக்கு (Scientific Community) அவரை குறித்தும், அவரது சாதனைகளை குறித்தும் தெரிந்தே இருந்தது. ஆனால், இதெல்லாம் பொதுமக்கள்ஸுக்கு, அவர் குடியரசு தலைவராக வந்தப்புறம் தொடர்ந்த மீடியா கவரேஜில் தான் தெரிய வந்தது…( அட நல்லதுகூட நிறைய நடக்குதுப்பா நாட்டுலே..)

அவர் பதவியில் இருந்த காலத்தில் அவரைதொடர்ந்த மீடியாவை நாமும் தொடர்ந்து வந்தால்.. ஒரு விஷயம் சும்மா நச்சுனு இருக்கும்.. அது தான்.. அவர் அடிக்கடி சொல்லும் “கனவு காணுங்கள்”… (இதை வச்சு எத்தனை பேர் நக்கலடிச்சிருப்பீங்க)… கொஞ்சம் யொசிச்சு பாருங்க..என்ன ஒரு சாதாரண வாசகம்..ஆனால் எவ்வளவு ஆழமான கருத்து… பிரமோஷன்்..ங்கிற கனவோடு தானே நாமெல்லாம் ஆபீஸ்லே மாடா ஒழைச்சு-ஓடா தேயறோம்…. நம்-நம் சொந்த வாழ்க்கையே ஒரு கனவுக்கு பிறகு இன்னொரு கனவுன்னு முன்னேறிக் கிட்டிருக்கோம்.

திரு.கலாமும் கனவு கண்டார்…. தன் வாழ்க்கைங்கிர வட்டத்தை விட்டு வெளியே வர கனவு கண்டார்… வந்தார், ,,,தான் கற்ற கல்வியை நாட்டுக்கு உயபோகமாக பயன்படுத்த ஆசைப்பட்டார்… செய்தார் / செய்துகொண்டே இருக்கிறார்,,,,தான் காணும் கனவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வந்தார்… பதவி காலத்தில் கிராமம்-நகரம் பாராமல் மாணவர்களை சந்தித்தார்.. கன்வுகளை தந்தார்… கனவு காண துணிவை குடுத்தார்.

இப்பெல்லாம் பேப்பர் -டீவீ..ந்யூஸ் எதை பார்த்தாலும் முதல்லே கேக்கர செய்தி … கொள்ளை – கொலை – ஊழல் எல்லாம் தான். இதெல்லாம் தேவையில்லையா… நாட்டில் நடக்கும் பயங்கரங்களை தெரிஞ்சிகிட்டாதானே நாம ஜாக்கிரதையா இருக்க முடியும்ன்னு நீங்க சொல்லரது எனக்கு புரியுது.. ஆனா.. பக்குவம் அடைந்த நமக்கே சில செய்திகள், சில நேரத்தில் ..நம்மை ஒரு ஆட்டு ஆட்டுதே… பாவம் வளந்து வரும் குழந்தைகள் மனதில் இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ? ?… அவங்களுக்கு ஏற்க்கணவே… டெஸ்ட் – ஹோம் வர்க் – அஸ்ஸைன்மெண்ட்ன்னு ஆயிரம் டெண்ஷண்.. இதெல்லாம் எதுக்கு பண்ணராங்க (.. இல்லே.. பெற்றோர்களாகிய நாம்… படி-படி ன்னு அதுகளை ட்ரில் வாங்கறோம்)…விஞ்யானியாகவோ -டாக்டரோ – இஞ்சினீயரோ – மீடியா பிரொபஷணலோ – ஏதோ ஒரு துறையிலே தேர்ந்து வரணும்ன்னுதானே… இந்த மாதிரி ஒரு இலக்கை வைத்து அந்த பிஞ்சுகள் முன்னே நடக்கும்போது எத்தனை sucess storeis ஐ எதிர்கொள்ளறாங்க… விரல் விட்டு எண்ணலாம்…. அல்லது தனது சொந்த முயற்சியால் வெற்றிபெற்றவர்களில் நமக்கு எத்தனை பேரை தெரியும் ?.. சொல்லுங்க பார்க்கலாம்.. … ….

தனது அயரா முயர்ச்சியால் வெற்றி பெற்றவர்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் , முயற்சி உடையார் – இகழ்ச்சி அடையார்ங்கிர தத்துவத்தை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கவும் திரு.கலாம் முன்வைத்த கனவை HAL -bangalore ஐ சேர்ந்த சில ஆர்வம்மிக்க படைப்பாளிகள் கொண்ட குழு, முழூ மூச்சுடன் செயல்பட்டு… Billion Beats ங்கிர இணைய-செய்தித்தாளை nov-14 அன்று திரு.கலாமின் அனுமதி -ஆசீர்வாதத்தோடு அவரே துவக்கியும் வைத்தார்…

நான் குடுத்திருக்கும் சுட்டியை க்ளிக்கினால்… அங்கே Billion Beats ன்னு நீங்க பார்க்கலாம்… அதை க்ளிக்கி தற்போதைய இதழை pdf வடிவில் டவுண்லோட் பண்ணி படிங்க… இந்த பத்திரிக்கையில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா… இது முழுக்க முழுக்க sucess stories மற்றும் … inspirational articles மட்டுமே பிரசுரிக்கும்… ஒரு மூலையிலே கூட… crime and punishment இருக்காது.

இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னான்னா… சொந்த முயற்சியால்.. பல தடைகளை தாண்டி சாதிக்க நினைச்சதை சாதிச்ச யாரையாவது உங்களுக்கு தெரியுமா ? ? ?.. அது மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும்ன்னு உங்களுக்கு ஆர்வம் உண்டா.. அப்போ.. நீங்க பண்ணவேண்டியதெல்லாம்… சம்பந்தப்ட்ட நிகழ்வை எழுதி billionbeats@gmail.com ங்கிர முகவரிக்கு உங்கள் passport size photo – phone number – address உடன் ஈ-மெயில் பண்ணுங்கள்… ஆசிரியர் குழு அதை கண்டிப்பாக பரிசீலனை செய்து பிரசுரிக்கவும் செய்வார்கள்

திரு. கலாம் கண்ட கனவு நினைவாக.. உங்கள் கனவுகளையும் எல்லாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்… உங்கள் நண்பர்கள் வட்டத்துகு திரு.கலாமின் கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் இந்த இணையதள-செய்தித்தாளை குறித்து மடல் அனுப்புங்கள் – சாட் செய்யுங்கள்

UPDATE :- Instructions …Write comments from directly from the post-page

In my previous post I was telling about how Jackbook has developed a hack to allow blogspot users to post their comments directly from the
post page. However the link to jacks instruction is not working for some strange reason. Nevertheless I am posting the instructions here . Hope Jack will not be offended.. this is just a Repeat-post..

Instructions to allow the comments from post page itself

  1. Settings – Comments – Show Comments in POP-UP window – YES
  2. Save and Back up you existing template
  3. Note that the “Expand Widget Template” has the “tick” mark
  4. Locate the code given below and add the lines marked in red
  5. <b:includable id=’comments’ var=’post’>
    <div class=’comments’ id=’comments’>
    <a name=’comments’/>
    <b:if cond=’data:post.allowComments’>

    <!– jackbook.com part 1 start –>
    <!–

    <h4>
    <b:if cond=’data:post.numComments == 1′>
    1 <data:commentLabel/>:
    <b:else/>
    <data:post.numComments/> <data:commentLabelPlural/>:
    </b:if>
    </h4>

    <dl id=’comments-block’>
    <b:loop values=’data:post.comments’ var=’comment’>
    <dt class=’comment-author’ expr:id='”comment-” + data:comment.id’>
    <a expr:name='”comment-” + data:comment.id’/>
    <b:if cond=’data:comment.authorUrl’>
    <a expr:href=’data:comment.authorUrl’ rel=’nofollow’><data:comment.author/></a>
    <b:else/>
    <data:comment.author/>
    </b:if>
    <data:commentPostedByMsg/>
    </dt>
    <dd class=’comment-body’>
    <b:if cond=’data:comment.isDeleted’>
    <span class=’deleted-comment’><data:comment.body/></span>
    <b:else/>
    <p><data:comment.body/></p>
    </b:if>
    </dd>
    <dd class=’comment-footer’>
    <span class=’comment-timestamp’>
    <a expr:href='”#comment-” + data:comment.id’ title=’comment permalink’>
    <data:comment.timestamp/>
    </a>
    <b:include data=’comment’ name=’commentDeleteIcon’/>
    </span>
    </dd>
    </b:loop>
    </dl>

    <p class=’comment-footer’>
    <a expr:href=’data:post.addCommentUrl’ expr:onclick=’data:post.addCommentOnclick’><data:postCommentMsg/></a>
    </p>
    –>
    <!– jackbook.com part 1 ends –>
    <!– actually i almost do nothing with your template, just add that comment, you did it 🙂 –>

    <div id=’comment-parent’ style=’padding-bottom: 20px;’ onmouseover=’showcomment(“hoverme”, “comment-child”);’>
    <h3 id=’hoverme’ style=’display:block;’>
    <img alt=’Your cOmment”s Here! Hover Your cUrsOr to leave a cOmment.’ src=’http://lifewg.googlepages.com/html-code-leave-comment.gif’ title=’Your cOmment”s Here! Hover Your cUrsOr to leave a cOmment.’/>
    </h3>

    <!– this iframe below is your comment form. you can change the height, or add more style property into it –>
    <div id=”comment-child” style=’border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;’>
    <iframe style=’border:none;’ expr:src=’data:post.addCommentUrl’ height=’100%’ scrolling=’yes’ width=’100%’/>
    <br/>
    <a href=’http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html’ title=’Want to have this on your blogger/blogspot?’>Comment Form under post in blogger/blogspot</a>
    </div>
    <!– end of iframe –>

    </div>

    </b:if>
    <div id=’backlinks-container’>
    <div expr:id=’data:widget.instanceId + “_backlinks-container”‘>
    <b:if cond=’data:post.showBacklinks’>
    <b:include data=’post’ name=’backlinks’/>
    </b:if>
    </div>
    </div>
    </div>
    </b:includable>

  6. Write the code below ABOVE the </body> tag
  7. <!– www.jackbook.com –>
    <!– this to hide and show el –>
    <script languange=’javascript’>function showcomment(a,b){var jackbookdotcom = document.getElementById(a);jackbookdotcom.style.display = ‘none’;jackbookdotcom = document.getElementById(b);jackbookdotcom.style.display = ‘block’;}</script>
    <!– www.jackbook.com –>

  8. Locate the code below and replace the code shown in red with the code written in green

  9. <span class=’post-comment-link’>
    <b:if cond=’data:blog.pageType != “item”‘>

    <b:if cond=’data:post.allowComments’>
    <a class=’comment-link’ expr:href=’data:post.addCommentUrl’ expr:onclick=’data:post.addCommentOnclick’>
    <a class=’comment-link’ expr:href=’data:post.url + “#comments”‘ >
    <b:if cond=’data:post.numComments == 1′>1 <data:top.commentLabel/>
    <b:else/><data:post.numComments/> <data:top.commentLabelPlural/></b:if></a>
    </b:if>
    </b:if>
    </span>

  10. Save Template and view any Blogpost ( which has comments)

Move your mouse over the comment-form… all the existing comments will be shown allong with the comment form to add new comment

TO ALTER THE HEIGHT-WIDTH-BACKGROUND OF THE COMMENT-FORM
Notice the lines shown in red in the code below
<!– this iframe below is your comment form. you can change the height, or add more style property into it –>
<div id=”comment-child” style=’border: none; display: none; height:750px; width: 420px; margin-bottom: 5px; background: #fff none; border: 1px solid #FCO;’>
<iframe style=’border:none;’
expr:src=’data:post.addCommentUrl’ height=’100%’ scrolling=’yes’ width=’100%’/>
<br/>
<a href=’http://www.jackbook.com/2007/06/how-to-make-readers-leave-comment.html’ title=’Want to have this on your blogger/blogspot?’>Comment Form under post in blogger/blogspot</a>
</div>
<!– end of iframe –>

  • Here height:750px; width: 420px; is responsible for the width and height of the comment form
  • You may change the width:99% to occupy the entire width of the colum
  • You may change the height:800px to increase the comment form section…. just play around with the values till you are satisfied
  • You may change the background: transparent, if you want the comment section to merge with the background of your blog
  • You may change to background:#DDDDDD, if you want to give a unique background color for the comment section… Use the hexadecimal color chart for any color of your choice

Hope this helps till Jack’s page is available to all of us once more. do drop your comments to express your appreciationYour appreciation is my motivation

என்ன கொடுமை சார் இது…:-/.. தமிழ்மணதுக்கு என்ன ஆச்சு ..!!!

நேற்றைக்கே நான் என் போட்டோ-பிளாகில் …..நிழல் ன்னு ஒரு படத்தை போட்டாச்சு.. ஆனா இதை தமிழ்மணத்தின் “இடுக்கைகள் புதுபிக்கும்: பொட்ட்டியிலே போட்டா.. அது பழய படத்தையே தான் சேத்துகிரது… இன்னிக்கு காலையிலெயிருந்து ட்ரை பண்ணறேன்..ஹூஹ்ம்,… எந்தபிரயோஜனமும் இல்லை.. திரும்ப திரும்ப … பறவை பப்பாயா சாப்பிடும் படத்தை தான் தமிழ்மணம் புதுப்பிகிரது…

ஏன் எனக்கு இப்படி ஆகுது… எனக்கு மட்டும் தானா இப்படி.. இல்லை என்னை மாதிரி யாருக்காவது இது போல நிகழ்ந்திருக்கா ? ? ?

பி.கு.. அடடா.. இந்த பதிவை கூட தமிழ்மணத்திலே புதுப்பிக்க முடியலையே… “புது இடுக்கைகள் எதுவும் காணாப்படுவதில்லை”ன்னு சேதி வருது….. ? ? ? ? ? ? ?