கதை புரிந்ததா?

லைப்பை பார்த்து ஏதோ தத்துவம் சொல்ல பொறேன்னு நினைசுடீங்களா?…அதெல்லாம் இல்லை. சமீபத்துல ஒரு கதை கேட்டேன். உங்கள்ள பலபேருக்கு தெரிஞ்ச கதையாதான் இருக்கும். ஆனாலும் பறவாயில்லை இன்னொரு முறை படிங்க.

முன்ரொரு காலத்தில் வயது-முதிற்ந்த குரு ஒருவர் தன் சிஶ்யனுடன் ஊர்-விட்டு ஊர் பொய்கொண்டிருந்தார். பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிஶ்யன் தன் சந்தேகங்களை கேட்க்க, குரு தான் அனுபவத்தில் அறிந்த உண்மைகளை பாடமாக பொதித்துவந்தார்.

ப்ரயாணத்தின் ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒரு நதியை வந்தடைந்தார்கள். நதியில் இடுப்பளவு மட்டுமே தண்ணி இருப்பதால் படகுகள் வருவதில்லை என்று தெரிந்துகொண்டார்கள். நடந்தே அக்கரை சேர்ந்துவிடலாம் என்று முற்ப்பட்ட போது அங்கே ஒரு இளம்பெணும் அக்கரை போகும் நோக்கத்தோடு வந்தாள். படகேதும் இல்லாததை கண்டு வருத்தப்பட்டாள்.

அவள் வருத்தத்தின் காரணம் கெட்டதர்கு … தன் தந்தைக்கு உடல்நிலை மிகவும் கவலைக்கடமாக் உள்ளதென்றும் ,.. வைத்தியர் அக்கரையில் வசிப்பவர் என்றும், … தனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக ஜொசியர் சொல்லியிருப்பதன் காரணத்தால் – படகு இல்லமல் தன்னால் அக்கரை போக முடியாததை நினைத்து விம்மியதாக கூறினாள்.

அந்த பெண்ணின் இயலாமைய்யும் அவசர நிலையும் உணர்ந்த சிஶ்யன் ..அவளை தன் தோளில் சுமந்து அக்கரை சேர்த்துவிட முன்வந்து சம்மதம் கேட்டான்..அவளும் தன் தந்தையை நினைத்து “ஆபத்துக்கு பாவம் இல்லை” என்று சம்மதித்தாள். இப்படி மூவரும் அக்கரையை வந்தடைதார்கள்.ஆந்த பண் குருவை வணங்கி சிஶ்யனுக்கு நன்றி சொல்லி வைத்தியர் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். குருவும் சிஶ்யனும் தங்கள் ப்ரயாணத்தை தொடர்ந்தனர்.

குருவின் முகத்தில் ஏதோ ஒரு சஞ்சலம். சிஶ்யனின் வினாக்களுக்கு பட்டும் படாமலும் விடை அளித்தார், காரணமில்லாமல் கோபித்தார். சிஶ்யனால் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஒரு ஆசார்யனாக வரவேண்டும் என்பதற்க்காக் குருகுலத்தில் படிக்கும் தான், அந்த பெண்ணை தொளில் சுமந்து வந்தது தான் குருநாதனின் கொபதிற்க்கு காரணம் என்று அறிந்தான்.

அவன் சொன்னான் ” குருவே அந்த பெண்ணை நான் நதி கரையிலெயே இறக்கிவிட்டேன் … நீங்கள் ஏன் சுமக்கிரீர்கள்….?”


இந்த கதைய கேட்டு நான் என்ன புரிஞிகிட்டேன்ன்னு.. என் அடுத்த பதிவுல சொல்லறேன்.
நீங்க என்ன புரிஞிகிடீங்கன்னு சொல்ல விருப்பபட்டா.. கண்டிப்பா comments-ல சொல்லுங்க