புரிந்ததும்..புரியாததும்..

தை படிசீங்க இல்லயா..?.என்ன முழிக்கறீங்க..இங்கே கதை படிங்க. என் புத்திக்கு எட்டியது இவ்வளவு தான்.
நினைவுகள் எல்லாமே ஒரு சுமை மாதிரி. சிலது பஞ்சாட்டம் சொகமா இருக்கும்…சிலது பாறாங்கல்லாட்டம் கனக்கும்..”நினைப்பு தான் பொழப்ப கெடுக்குது ” ன்னு சொல்லுவாங்க இல்லயா?…
அதுமாதிரி நம்ம மனதை ஒரு-நிலை படுத்தாம பொழப்ப கெடுக்கற எந்த நினைப்பும் பாறாங்கல் தான். அதை உடனே இறக்கவில்லை என்றால், அந்த நினைவின் பாரம் நம்மை வாழக்கயில் முன்னேற முடியாம செய்துவிடும்…அப்படி முன்னேற்றத்தை தடுக்கும் நினைப்பு நமக்கு தேவயா..?..”சீ-போ ” ன்னு சொல்லி அப்படிபட்ட நினைப்பை தூக்கிப் பொட்ட உடனே பாருங்க..சுகமான நினைப்புகள் எல்லம் நினைவுக்கு வந்து அப்படியே பஞ்சாட்டம் முன்னெற்ற பாதையில் சிரமம் இல்லாம போகலாம்.என்ன நான் சொல்வது செரிதானே …? ? ?

2 Replies to “புரிந்ததும்..புரியாததும்..”

  1. தீபா சொல்வது புரிந்தது மட்டுமல்ல தெரிந்ததும் கூட. ஆனால் அது எப்படி என்று தான் தெரியவில்லை. கழுதை என்ன விரும்பியா சுமை சுமக்கிறது? ஆல்லது “உன் முதுகில் கட்டி வைத்திருக்கும் சுமையை தூக்கி எறி சகோதரா” என்று சொல்லிக்கொடுக்கத்தான் வேறு கழுதைகளில்லையா? ஆனால் அதெப்படி தன் முதுகில் கட்டி வைத்திருக்கும் அழுக்கு மூட்டையை தானாக தூக்கி எறிவது என்ற அறிவு கழுதைக்கிருந்தால், கழுதை மனிதனாகியிருந்திருக்காது? வேண்டாத கவலைகளை “தூக்கி எறிவது” எப்படி என்று அறிந்திருந்தால் மனிதன் தெய்வமாகியிருந்திருக்க மாட்டான்? ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *